இசைமயமான பேஸ்புக்
இசை சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது ஸ்லேப்ஸ்.காம் ( https://slaps.com/). சவுண்ட்கிளவுட் பாதி, பேஸ்புக் மீது என இந்த புதிய சேவையை வர்ணிக்கலாம்.
டிவிட்டர் போல இதில் குறும்பதிவாக, பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம். கேட்டு ரசித்த பாடல் பற்றிய சிறிய அறிமுகத்துடன் அதன் ஆடியோ கோப்பை பகிரலாம்.
இப்படி பகிரப்படும் ஆடியோ கோப்புகள் வரிசையாக டைம்லனில் தோன்றுகின்றன. விரும்பிய பாடலை அதற்கான ஆடியோ கோப்பை கிளிக் செய்து கேட்டு ரசிக்கலாம். அப்படியே விருப்பம் தெரிவிக்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். கருத்தும் தெரிவிக்கலாம். பிடித்த பாடலை பின்னர் கேட்க சேமித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட தலைப்பிலான பாடல்களை ஒரு குழுவாக சேர்க்கலாம்.
குறிப்பிட்ட அந்த பாடலை பகிர்ந்தவரை பின் தொடரலாம். சக ரசிகர்களை பின் தொடர்வதன் மூலம் அவர்கள் வாயிலாக புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். இசை பிரியர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்து கொண்டு தங்களுக்கான ஆதரவாளர்களையும் பெறலாம்.
ஒவ்வொரு பாடல் பகிர்வு தொடர்பாக பரிமாறிக்கொள்ளப்படும் கருத்துகள் புதியதகவல்களையும், புரிதலையும் அளிக்கலாம். இசைப்பிரியர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் மேற்கத்திய இசைமயமாக இருக்கிறது.
நம்மூர் இசையையும் இதே முறையில் பகிர விரும்பினால், இதே போன்ற இன்னொரு சேவை: இணையத்தில் இசை கேட்டு ரசிக்க இனிய வழி