ஆவணப்படங்களுக்கான நெட்பிளிக்ஸ்
ஓடிடி மேடை அல்லது ஸ்டிரீமிங் தளமான நெட்பிளிக்சில் நீங்கள் ஆவணப்படங்களையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால், ஆவணப்படங்களுக்காக என்று தனியே ஒரு ஓடிடி சேவை இருந்தால் எப்படி இருக்கும்? டாக்குபே (https://www.docubay.com/ ) இத்தகைய சேவையாக அமைகிறது.
ஆவணப்பட பிரியர்கள் இந்த சேவை மூலம், ஆவணப்படங்களை தேர்வு செய்து பார்க்கலாம். புதிதாக வெளியாகும் ஆவணப்படங்கள் முதல், ஏற்கனவே வெளியான ஆவணப்படங்கள் வரை எல்லா வகையான ஆவணப்படங்களையும் இந்த சேவையில் அணுகலாம்.
ஆவணப்படங்களை எளிதாக தேர்வு செய்யும் வகையில், அவற்றின் வகைகளுக்கு ஏற்ப தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. தொழிநுட்பம், இசை, இயற்கை, சுயசரிதை, அறிவியல், சுற்றுச்சூழல், கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட தலைப்புகளில் ஆவணப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன,
ஒவ்வொரு ஆவணப்படம் தொடர்பான சுருக்கமான தகவல்கள் மற்றும் அதன் முன்னோட்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.
இவைத்தவிர, புதிதாக வெளியாகும் ஆவணப்படங்களையும் முகப்பு பக்கத்திலேயே அறிமுகம் செய்து கொள்ளலாம். தாங்களாக தேர்வு செய்ய விரும்பாதவர்கள், லைவ் பகுதியில் பரிந்துரைக்கப்படும் படங்களை பார்க்கலாம்.
மூன்று விதமான கட்டண அமைப்புகளை கொண்டுள்ளது இந்த சேவை. சும்மா வெப்சிரீஸ், திரைப்படங்கள் என பார்த்து தள்ளுவதற்கு பதில், உலக நடப்புகளுடன் தொடர்புடைய ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க விரும்புகிறவர்களுக்கான சேவை இது.