புத்தக வாசிப்புக்கு உதவும் இணையதளம்
ஒன்மோர்பேஜ் (https://onemorepage.co/) இணையதளத்தை, ஒரு புத்தகத்தை வாசிக்க தேவைப்படக்கூடிய நேரத்தை கணக்கிட்டு சொல்லும் ’இன்னொரு’ இணையதளம் என ஒற்றை வரியில் அறிமுகம் செய்யலாம். இதில் இன்னொரு என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், புத்தக வாசிப்பு நேரத்தை கணிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன. பெரும்பாலான ஆங்கில புத்தகங்களை குறிப்பிட்டால், அவற்றை படிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை இந்த தளங்கள் கணித்து சொல்கின்றன.
ஒவ்வொருவருக்கும் வாசிப்பு வேகம் என ஒன்று இருக்கும். ஒரு மணி நேரத்தில் ஒருவரால் எத்தனை வார்த்தைகளை படிக்க முடியும் எனும் அடிப்படையில் இது அமைகிறது. ஒரு சிலரால் மணிக்கு 100 வார்த்தைகள் படிக்க முடியும் என்றால் இன்னும் சிலர் மணிக்கு 250 வார்த்தைகள் படிக்கும் திறன் கொண்டிருக்கலாம்.
இந்த வாசிப்பு வேகத்தின் அடிப்படையில் புத்தகத்தின் மொத்த பக்கங்களை படிக்க எவ்வளவு நேரம் ஆகும் என இந்த தளங்கள் கணக்கிட்டு சொல்கின்றன.
ஒன்மோர்பேஜ் தளமும் இதே போன்ற வாசிப்பு கணிப்பை வசதியை அளிக்கிறது. இதன் முகப்பு பக்கத்தில் உள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து அல்லது பயனாளிகள் விரும்பும் புத்தகத்தை குறிப்பிட்டு வாசிப்பு நேரத்தை அறியலாம். வாசிப்பு கணிப்புடன் புத்தகம் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் அறியலாம். விரிவான பட்டியல் என்று சொல்வதற்கில்லை ஆனால், எளிமையாக இருக்கிறது இந்த தளம்.
பயனாளிகள் தங்கள் வாசிப்பு வேகத்தையும் பரிசோதித்துக்கொள்ளலாம்.
இதோ போன்ற வாசிப்பு இணையதளம் இங்கே…