இடைவெளி இல்லாமல் இசை கேட்க இந்த தளம்
ஒலிமயமான இணையதளங்கள் வரிசையில் வருகிறது ’ஜெனரேட்டிவ்.எப். எம்’ இணையதளம்.
நீங்கள் விரும்பிய இசையை விரும்பிய காலத்திற்கு இடைவெளி இல்லாமல் கேட்க வழி செய்கிறது இந்த தளம். இசை எனும் போது, வழக்கமாக மனதில் தோன்றக்கூடிய மெல்லிசையோ, வேறு எந்த பாடல் சார்ந்த இசையோ அல்ல. திரைப்பட பின்னணி இசையும் அல்ல: மாறாக, சுற்றுப்புற ஒலி என குறிப்பிடக்கூடிய சூழல் ஒலிகள் சார்ந்த இசைக்கோர்வைகளை கேட்டு ரசிக்க இந்த தளம் வழி செய்கிறது.
மனதுக்கு பிடித்த இசையை பெரும்பாலும் அதற்கென தனியே கேட்டு ரசிக்க வேண்டும். அதே நேரத்தில் பணியில் மூழ்கியிருக்கும் போது அல்லது பணிக்கு நடுவே ஓய்வெடுக்க விரும்பும் போது, மனதுக்கு பிடித்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருப்பது மனதை லேசாக்கும். அந்த வகையில் விரும்பிய பின்னணி ஒலிகளை கம்ப்யூட்டரில் கேட்கச்செய்யும் இணைய சேவைகள் பல உள்ளன. இதே ரகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், ஜெனரேட்டிவ்.எப்.எம், தளம், சூழல் சார்ந்த இசையை இடைவெளி இல்லாமல் கேட்க வழி செய்கிறது.
அதாவது, இதில் உள்ள இசை கோப்புகள் மணிக்கணக்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. கேட்ட இசை வடிவமே மீண்டும் மீண்டும் கேட்கலாமல், தொடர்ந்து ஒரே மாதிரியான புதிய இசையை கேட்டுக்கொண்டிருக்கலாம்.
அந்த வகையில் உருவாக்கப்படும் இசை என்றாலும், ஏஐ உருவாக்கும் இசையாக அல்லாமல், மனித கரங்களால் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 50 க்கும் மேற்பட்ட இசைக்கோர்வைகள் உள்ளன. இவற்றை அப்படியே ஒலிக்கச்செய்யலாம், விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம்.
அல்கெஸ் பெயிண்டர் என்பவர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.
-