இணையதளங்களுக்கு நீளமான பெயர் வைக்க ஒரு நியாயம் இருக்க வேண்டும். அந்த நியாயம் சுவாரஸ்யமானதாகவும் இருக்க வேண்டும்.
கொஞ்சம் வில்லங்கமான பெயர் கொண்ட, ’வாட்தஃபக்கிங்ஷுட்ஐலிஸின்ரைட்நவ்’ (
https://whatthefuckshouldilistentorightnow.com/
) இந்த வகையின் கீழ் தான் வருகிறது. இவ்வளவு நீளமான பெயரா எனும் கேள்வியோடு இந்த தளத்தின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்தால், பெயர் காரணத்திற்கான நியாயத்தை புரிந்து கொள்ளலாம்.
இசை பிரியர்கள் கேட்டு ரசிக்க கூடிய அடுத்த பாடலை வித்தியாசமான முறையில் பரிந்துரைக்கும் தளம் இது. இப்போது நான் என்ன பாடலை தான் கேட்டு ரசிப்பது? எனும் கேள்விக்கு விடையாக அமைகிறது இந்த தளம்.
இந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில், இசை பிரியர்கள் தங்கள் விரும்பும் பாடகர் அல்லது இசைக்கலைஞர் பெயரை குறிப்பிட்டு தேடினால், தொடர்புடைய பொருத்தமான பாடகர் பெயரை பரிந்துரைக்கிறது.
பரிந்துரைக்கப்படும் பாடகர் பெயரை கிளிக் செய்தால் அவர்களுடைய ’லாஸ்ட்.எப்.எம்’ பக்கம் வந்து நிற்கிறது. அங்கிருந்து பாடலை கேட்கலாம் அல்லது மேலதிக தகவல்களை அறியலாம். பரிந்துரைக்கப்பட்ட பாடகர் மீது ஆர்வம் இல்லை என்றால், வேறு பாடகருக்கான பரிந்துரையை கோரலாம். இப்படியே தொடர்ச்சியாக பாடகர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஆங்கில படங்களில் அடிக்கடி கேட்க கூடிய வசைச்சொல்லோடு பொறுமையில்லாமல் அடுத்த பாடலுக்கான பரிந்துரையை கேட்பது போல தளம் அமைந்திருந்தாலும், சுவாரஸ்மாக இருக்கிறது.இசை பிரியர்கள் முயற்சித்து பார்க்கலாம்.
Happy to find this site