நண்பர் வழி இசை கண்டறிதல்
உங்களுக்கு பிடித்தமான புதிய பாடலை கண்டறிந்து கேட்டு ரசிப்பதை விட இசைப்பிரியர்களுக்கு ஆனந்தமானது வேறு இருக்காது. இந்த விஷயத்தில் ஸ்பாட்டிபை பயனாளிகளை விட வேறு யாருக்கும் அதிக வாய்ப்புகள் இருக்காது என்று சொல்லலாம். சந்தேகம் எனில், ஏற்கனவே எழுதப்பட்ட ஸ்பாட்டிபை சார்ந்த பதிவுகளை பார்க்கவும். இப்போது சமீபத்திய உதாரணத்தை பார்க்கலாம்.
டிஸ்கசர்-டுகதர் (https://discover-together.com/ ) இணையதளம், நீங்களும், உங்கள் நண்பருமாக சேர்ந்து, அடுத்த புதிய பாடலை கண்டறிய வழி செய்கிறது.
ஸ்பாட்டிபையில் ஒருவர் கேட்டு ரசிக்கும் பாடல்களை கொண்டு, அவரது இசை ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, அவருக்கு பிடிக்க கூடிய பாடல்கள் பட்டியலை உருவாக்கி விடலாம். இத்தகைய பரிந்துரை சேவைகள் பல இருந்தாலும் பெரும்பாலும் இவை தனித்தேடலுக்கானது. அதாவது, உங்கள் ரசனை சார்ந்த தேடலின் அடிப்படையில் அமைகிறது.
இதற்கு மாறாக, அடுத்த பாடலுக்கான தேடலை, நண்பரோடு இணைந்து கூட்டாக மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அதை தான், இந்த தளம் செய்கிறது. இந்த தளத்தில் நுழைந்து, உங்கள் ஸ்பாட்டியை இசை சேவை கணக்கு மற்றும் நண்பரின் இசை சேவை கணக்கு இரண்டையும் சமர்பித்தால், இருவரின் ஸ்பாட்டிபை தேர்வுகள் அடிப்படையில் பொருத்தமான பாடல்களை இந்த தளம் பரிந்துரைக்கிறது.
நட்பு மணம் கமழ, புதிய பாடல்களை கேட்டு ரசியுங்கள்!