
Discover more from இணைய மலர்
புத்தக பரிந்துரை இணையதளம்

அடுத்து என்ன புத்தகம் வாசிக்கலாம் எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில், வருகிறது நெக்ஸ்ட்புக்டுரீட் (http://www.nextbooktoread.com/ ) இணையதளம்.
நீங்கள் வாசிக்கும் அல்லது வாசித்த புத்தகங்களுக்கு ஏற்ப அடுத்து வாசிக்க கூடிய புத்தகங்களை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது இந்த தளம்.
முதலில் நீங்கள் ஒரு புத்தகத்தில் இருந்து துவங்க வேண்டும். இதற்காகவே, தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை தேர்வு செய்ய வேண்டும். ( இந்த பட்டியலில் உங்கள் அபிமான புத்தகம் இல்லை எனில் அதை பரிந்துரைக்கலாம்.)
இதன் பிறகு, புத்தக வகையை தேர்வு செய்து, அதில் உள்ள முன்னணி புத்தகங்களை தேர்வு செய்து சமர்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில், உங்களுக்கு பொருத்தமான புத்தகங்கள் பரிந்துரைக்கப்படும்.
உங்கள் ரசனைக்கேற்ப, எங்கள் வாசக வடிகட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த பரிந்துரையை அளிப்பதாக இந்த தளம் குறிப்பிடுகிறது.
இந்த பரிந்துரை எந்த அளவு ஏற்றதாக இருக்கும் எனத்தெரியவில்லை. ஆனால், பரிந்துரையை மேற்கொள்வதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது ஒரு சுவாரஸ்யம். புத்தகங்கள் தொடர்பான சுருக்கமான அறிமுகம் மற்றும் அமேசானில் வாங்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்கள் முயற்சிக்கலாம். தமிழ் புத்தகம்? என கேட்பவர்கள் ஏக்க பெருமூச்சி விட்டபடி நகரவும்.
-
புதுமையான புத்தக பரிந்துரை தளம்
-