இணைய மலர்

Share this post
தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளம்…
cybersimman.substack.com

தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளம்…

cybersimman
May 22, 2020
2
2
Share this post
தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளம்…
cybersimman.substack.com

இன்று பயன்பாடு சார்ந்த சில இணையதளங்கள் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

முதலில் பிக்ஸாபே (https://pixabay.com/)

வலைப்பதிவில் அல்லது இணையதளத்தில் பகிர பொருத்தமான புகைப்படங்கள் தேவைப்பட்டால் பிக்ஸாபே தளம் கைகொடுக்கும். காப்புரிமை சிக்கல் இல்லாத, அருமையான புகைப்படங்களை இந்த தளம் பட்டியலிடுகிறது. விருப்பமானதை தேடி எடுத்து பயன்படுத்தலாம். எல்லாமே துல்லியமான, இழுத்து பெரிதாக்கினாலும் பிக்சல்கள் உடையாத படங்கள்.

இதில் உள்ள படங்களை பெரிதாக்கி பார்க்கலாம். படங்கள் தவிர, கோட்டோவிய பாணி சித்திரங்கள், வெக்டார் ரக சித்திரங்கள் மற்றும் வீடியோக்களையும் இந்த பட்டியலில் பார்க்கலாம். இசை கோர்ப்புகளும் கூட இடம்பெற்றுள்ளன.

இவற்றில் பொருத்தமானதை தேர்வு செய்வதற்கு அருமையான தேடல் வசதியும் இருக்கிறது. படங்கள் அனைத்தும் பிக்ஸாபே உரிமம் கீழ் வழங்கப்படுகிறது.

பிக்ஸாபே புகைப்பட இணையதளம் மட்டும் அல்ல, இது புகைப்படம் சார்ந்த துடிப்பான இணைய சமூகமாகவும் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

-

அடுத்ததாக டெக்ஸ்ட்மஜோ ( https://textmoji.app/ )

எழுத்து வடிவம் சார்ந்த இமோஜிகளை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது இந்த தளம். நீங்கள் விரும்பும் வாசகத்தை டைப் செய்து விட்டு, இதில் உள்ள பின்னணியை தேர்வு செய்து, உங்களுக்கான இமோஜியை உருவாக்கி கொள்ளலாம். தொழில்முறை மெசேஜிங் சேவையான ஸ்லேக்கில் பகிர்வதற்காக இந்த இமோஜிகளை பயன்படுத்தலாம் என்றாலும், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

-

புகைப்பட கொலேஜ்களை உருவாக்க…

மூன்றாவதாக போட்டோவிஸி. (https://www.photovisi.com/)

இது பல புகைப்படங்களை ஒன்றாக கலந்து, அழகிய புகைப்பட கொலேஜை உருவாக்குவதற்கான சேவை. கொலேஜ்களை உருவாக்குவதற்கான எண்ணற்ற டெம்பிள்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேர்வு செய்து, புகைப்படங்களை பதிவேற்றி நமக்கான கொலேஜை உருவாக்கி கொள்ளலாம். வாசகங்களை சேர்ப்பது, பின்னணி மாற்றுவது என உப வசதிகளும் அநேகம் இருக்கின்றன.

புகைப்பட கொலேஜ் வசதி மட்டும் அல்ல, புகைப்படங்களை திருத்துவதற்கான எடிட்டர் வசதியும் இந்த தளத்தில் இருக்கிறது. புகைப்படத்தை பதிவேற்றி, அதற்கேற்ற பில்டர் பொருத்தி மெருகேற்றலாம்.

-

பேஸ்புக்கிற்கு ஏற்ற படங்கள் (https://resizing.app/ )

புகைப்படம் சார்ந்த இன்னொரு பயனுள்ள சேவை ரிசைசிங்.ஆப். இந்த சேவை மூலம், புகைப்படங்களை பேஸ்புக்கு உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம். அதோடு ஜேபெக் உள்ளிட்ட பொருத்தமான கோப்பு வடிவிலும் மாற்றிக்கொள்ளலாம். படத்தை வெட்டுவது, சுருக்குவது போன்றவற்றையும் எளிதாக செய்து கொள்ளலாம். குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பாகவும் பயன்படுத்தலாம்.

-

தமிழ் எழுதி (https://tamileditor.org/)

இறுதியாக, இணையத்தில் எளிதாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதியான தமிழ் எடிட்டர் தளத்தை பார்க்கலாம்.

இன்று, ஸ்மார்ட்போன் யுகத்தில் தமிழில் டைப் செய்வது மிக எளிதாக இருக்கிறது. இதற்கு என்று பிரத்யேகமாக செயலிகள் இருக்கின்றன.

ஆனால், ஒரு காலத்தில் இணையத்தில் தமிழில் டைப் செய்ய பெரும்பாடு பட வேண்டியிருக்கும். தமிழ் தட்டச்சு விசைப்பலைகையை தேட வேண்டும், அதற்கான எழுத்துருவும் தேவை.

இந்த பின்னணியில் தான், தமிழ் எழுதி அறிமுகமானது. இந்த தளத்தில், எந்தவித தட்டச்சு பயிற்சியும் இல்லாமல் எவரும் தமிழில் டைப் செய்யலாம். இதில் உள்ள, வேர்ட்பேடு போன்ற பகுதியில் தமிங்கிலிஷ் விசையில் டைப் செய்ய வேண்டியது தான். தமிழ் விசைப்பலகையையும் தேர்வு செய்யலாம்.

இதில் சேமிக்கும், நகலெடுக்கும் வசதியும் உண்டு.

முன்பு இருந்ததை விட, இந்த சேவை தற்போது மேம்படுத்தப்பட்டு இன்னும் பொலிவான இடைமுகத்துடன் வரவேற்கிறது. டைப் செய்ததை வாட்ஸ் அப்பில் பகிரும் வசதியும் இருக்கிறது.

-

பி.கு: தனிப்பட்ட முறையில் ’தமிழ் எழுதி’ எனக்கு பிடித்தமான இணையதளம். வலைப்பதிவு செய்யத்துவங்கிய காலத்தில் நான், தட்டச்சு செய்ய இந்த தளத்தை தான் பயன்படுத்தினேன். எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. அதன் பிறகு என்.எச்.எம்முக்கு மாறிவிட்டேன். என்.எச்.எம். மென்பொருளை பயன்படுத்த துவங்கிய போது, பெரியதொரு சுதந்திரம் கிடைத்தது போல் இருந்தது. இன்னமும் அது தொடர்கிறது. காசு கொடுக்க வேண்டும் என்று கூறினால் நான் தயங்காமல் ஒப்புக்கொள்ளும் மென்பொருள்கள் பட்டியலில் என்.எச்.எம் முதலில் இருக்கும்!

2
Share this post
தமிழில் தட்டச்சு செய்ய உதவும் இணையதளம்…
cybersimman.substack.com
2 Comments

Create your profile

0 subscriptions will be displayed on your profile (edit)

Skip for now

Only paid subscribers can comment on this post

Already a paid subscriber? Sign in

Check your email

For your security, we need to re-authenticate you.

Click the link we sent to , or click here to sign in.

Ganesh Sivakumar
Dec 1, 2021

Try this https://www.writetamil.com/

Expand full comment
ReplyCollapse
இ.பு.ஞானப்பிரகாசன்
Aug 31, 2020

அட! புதிய இதழா? நன்றாக இருக்கிறது ஐயா! உங்களுடைய மற்ற இணையத் தமிழ் முயற்சிகள் போல் இந்தப் புது முயற்சியும் பெருவெற்றி அடைய அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்!

Expand full comment
ReplyCollapse
TopNewCommunity

No posts

Ready for more?

© 2022 cybersimman
Privacy ∙ Terms ∙ Collection notice
Publish on Substack Get the app
Substack is the home for great writing