புது கவிதையாக ஒரு இணையதளம்!
இன்று ஒரே ஒரு இணையதளம் பற்றி பார்க்கலாம். இந்த தளமும் மிக எளிதானது. நம் எல்லோர் மனதிலும் உள்ள ஒரு கேள்வியை இணைய முகவரியாக கொண்டுள்ள இந்த தளம் அதற்கான பதிலை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது.
தனிமைபடுத்தலில் இருந்து நாம் வெளியேறிவிட்டோமா? (https://areweoutofquarantineyet.com/) – இது தான் அந்த கேள்வி.
கொரோனா உலகை உலுக்கி கொண்டிருக்கும் வேளையில் எல்லோரும் கேட்க விரும்பும் கேள்வி இது.
இல்லை, எனும் தற்போதைய நிதர்சனத்தை பதிலாக அளிக்கிறது இதன் உள்ளடக்கம்.
இந்த பதில் மாறும் போது தெரிவிக்கிறோம் என்ற ஆறுதல் செய்தியும் அதன் கீழ் இடம்பெற்றுள்ளது.
ஆக, இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதில், இல்லை எனும் பதிலுக்கு பதிலாக ஆம் எனும் பதில் வரும் போது உலகம் கொரோனாவில் இருந்து விடுபட்டதாக நிம்மதி பெருமூச்சு விடலாம்.
-
இந்த தளத்தை உருவாக்கியவர்:
-
இத்தகைய ஒரே கேள்வி ஒரே பதில் இணையதளங்கள் பற்றிய முந்தைய பதிவு:https://cybersimman.substack.com/p/message-7
-