மின்னூல் சலுகைகளை அறிவதற்கான இணையதளம்
இலவசம் மின்னூல்களை பட்டியலிடும் இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றை தனியே பார்க்கலாம். இப்போது, கட்டணம் மின்னூல்களில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை அடையாளம் காட்டும் இணையதளம் பற்றி பார்க்கலாம்.
மின்னூல்கள் என்றதும் அமேசானும், அதன் மின்னூல் வாசிப்பானுமான கிண்டிலும் தான் முதலில் நினைவுக்கு வரும். கிண்டிலில் வெளியாகும் மின்னூல்களை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்றாலும், ஆடித்தள்ளுபடி, புத்தாண்டு விற்பனை போல அமேசானிலும் அடிக்கடி மின்னூல்கள் விலை குறைக்கப்படுவதும் உண்டு.
பல நேரங்களில் மின்னூல்களை இலவசமாகவும் தரவிறக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதுண்டு. இது போன்ற தருணங்களில் விரும்பிய நூல்களை இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால், இது போன்ற மின்னூல் சலுகை அறிவிப்புகளுக்காக காத்திருக்க வேண்டும். இந்த அறிவிப்புகளை நண்பர்கள் அவ்வப்போது பரிந்துரைப்பது என்றாலும், இவற்றை தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த இடத்தில் தான் ஒன் ஹண்ட்ரடு பிரி புக்ஸ் (https://ohfb.com/) இணையதளம் வருகிறது. இந்த தளம், அமேசான் உள்ளிட்ட இணைய புத்தக கடைகளில் சலுகை விலையில் மட்டும் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை பட்டியலிடுகிறது. இன்றைய தேதியில் இலவசமாக கிடைக்கும் மின்னூல்களை இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தினசரி மின்னூல் சலுகைகளை பட்டியலிடுவதோடு அவற்றை வகை வகையாக தேடும் வசதியையும் அளிக்கிறது. ஆனால், ஒரே குறை எல்லாமே ஆங்கில நூல்கள் என்பது தான்.
*
இதே போலவே, ஹண்ட்ரடு ஜிரோஸ் ( http://in.hundredzeros.com/) எனும் தளமும் இருக்கிறது. பிரத்யேகமாக அமேசான் கிண்டில் வாசிக்க கூடிய இலவச மின்னூல்களை பட்டியல் போட்டும் இணையதளம் இது. இந்திய வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவரான அமீத் அகர்வால் உருவாக்கியுள்ள இந்த சேவையின் சர்வதேச தளம் மற்றும் இந்திய பதிப்புகளும் இருக்கின்றன.
தமிழ் மின்னூல்களின் சலுகைகளை அடையாளம் காட்டும் வகையில் ஒரு இணையதளம் தேவை.
*
இலவச மின்னூல் அல்லது இலவச புத்தகம் எனும் போது காப்புரிமை விடுபட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட நூல்களையே குறிப்பிடுகிறேன். பிடிஎப்பிப் உலா வரும் திருட்டு புத்தகங்களை அல்ல.
காப்புரிமை விடுபட்ட நூல்களின் சேமிப்பகமாக விளங்கும் குடென்பர்க் இணையதளம் பற்றி அறிய….