டப்பிங் குரல் கொடுக்கும் ஏஐ இணையதளம்
பேப்பர்கப் (https://www.papercup.com/ ) கட்டணச் சேவை இணையதளம் என்பதால், பலருக்கும் ஈர்ப்பில்லாமல் போகலாம் என்றாலும், இந்த தளம் எவரையும் கலக்கத்தில் ஆழ்த்திவிடக்கூடும். ஏனெனில், ஏ.ஐ துணை கொண்டு வீடியோக்களை எல்லாம் பிற மொழிகளில் டப் செய்து தருகிறது.
இந்த தளத்தில் வீடியோக்களை சமர்பித்தால், அதன் உள்ளட்டகத்தை மொழி பெயர்த்து தருவதோடு, அதற்கு ஒலி வடிவையும் உருவாக்கித்தருவதாக கூறுகிறது. கற்றல் வீடியோக்கள் துவங்கி, ஆவணப்பட வீடியோக்கள், பயிற்சி வீடியோக்கள் என பலவற்றில் இந்த ஏஐ சேவையை பயன்படுத்தலாம் என்கிறது இந்த தளம்.
போகிற போக்கை பார்த்தால் திரைப்படங்களில் டப் செய்வதற்கு கூட ஏஐ வந்துவிடலாம் போலிருக்கிறது.
-