பிட்காயின் பிரம்மாவுடன் பேசவதற்கு ஒரு சாட்பாட்
சாட்ஜிபிடியை விட்டுத்தள்ளுங்கள், நீங்கள் நினைத்தால் கூட உங்களுக்கான ஒரு சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா? மெசஞ்சர்ஸ்.யோ (https://www.messengerx.io) தளம் தான் இப்படி சாட்பாட்டை உருவாக்க வழி செய்கிறது.
சாட்பாட்களை உருவாக்க வழி செய்யும் சேவை அளிக்கும் இந்த தளம் மூலம் நீங்களும் உங்களுக்கு விருப்பமான சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம். அதற்கு உதாரணமாக, ஒரு சில சாட்பாட்களும் இந்த தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியுடன் உரையாடுவது போன்ற உணர்வை அளிக்கும் சாட்பாட்டும், விக்கிபீடியா கட்டுரைகளை வாசிப்பதற்கான சாட்பாட்டும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதே போல, கிரிப்டோநாணயம் பிட்காயினை உருவாக்கிய சடோஷி நகமோட்டோவுடன் உரையாடவும் ஒரு சாட்பாட் இந்த தளத்தில் உள்ளது. ( பிட்காயின் நிறுவனர் சடோஷி என்று சொல்லப்படுகிறதே தவிர அவர் இதுவரை அனமதேயமாக தான் இருக்கிறார் எனும் தகவலை அறிந்து கொண்டு இந்த சாட்பாட்டுடன் உரையாடுவது நல்லது). https://www.messengerx.io/satoshi-nakamoto
இந்த உதாரணங்கள் பிடித்திருந்தால் நீங்களும் ஒரு சாட்பாட்டை உருவாக்கி கொள்ளலாம். வர்த்தக நோக்கிலும் சாட்பாட்டை உருவாக்கலாம்.
ஆனால், ஒன்று இந்த சாட்பாட்கள் ஏஐ கொண்டு செயல்படுகின்றன என்பதையும், அவற்றின் தகவல்கள் முழுவதும் நம்பகமானவை அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.