ஏஐ செக்லிஸ்ட் இணையதளம்
செய்ய வேண்டிய முக்கிய செயல்களை பட்டியலிட்டு வழிகாட்டும் செக்லிஸ்ட் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய செக்லிஸ்ட் உங்களுக்கும் கூட தேவைப்படலாம். செக்லிஸ்ட்.ஜிஜி (https://checklist.gg/ ) இணையதளம் இத்தகைய செக்லிஸ்ட்களை தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
இணையத்தில் செக்லிஸ்ட் தளங்களும், கட்டுரைகளும் அநேகம் என்றாலும், இந்த தளத்தில் என்ன சிறப்பு என்றால், இந்த தளம் ஏஐ துணையோடு செக்லிஸ்ட்களை தொகுத்தளிக்கிறது. சாட்ஜிபிடிக்கு அடிப்படையாக அமைந்த ஜிபிடி மேடை மூலம் இந்த தளம் செக்லிஸ்ட்களை அளிக்கிறது. முக்கியமாக வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செயல்திறனை அதிகரித்துக்கொள்வதற்கான செக்லிஸ்ட்களை இந்த தளத்தில் காணலாம்.
பல்வேறு தலைப்புகள் மற்றும் துணை பிரிவுகள் கீழ் செக்லிஸ்ட்கள் இடம்பெற்றுள்ளன. தேவைக்கேற்ப தேடிக்கொள்ளலாம். அடிப்படை சேவை இலவசம் என்றாலும், கூடுதல் அம்சங்களை கட்டணம் கொண்டு அணுக வேண்டும்.