என்ன படம் பார்க்கலாம் அல்லது என்ன புத்தகம் படிக்கலாம் எனும் கேள்விகள் இருப்பது போல, இன்னும் பொதுவாக ‘இப்போது என்ன செய்யலாம்’ எனும் கேள்வியும் உங்களுக்கு இருக்கலாம்.
அதாவது அலுப்பூட்டுவதாக உணரும் தருணம் அல்லது கைவசம் இருக்கும் நேரத்தில் என்ன செய்வது எனத்தெரியாமல் மென் குழப்பத்தில் ஆழ்த்திருக்கும் நேரத்தில், என்ன செய்வது? என மனதில் கேள்வி எழும் தருணங்கள்.
இந்த கேள்விக்கு ஒவ்வொரு கிளிக்காக பதில் அளித்து கொஞ்சம் ஊக்கத்தை அளிக்கும் வகையில், வாட்டுடூ (https://whattodo.dng.bio/) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மிக மிக எளிமையான வடிவமைப்பை கொண்டுள்ள இந்த தளத்தில் ’என்ன செய்வது’ (whattodo ) எனும் வார்த்தைகள் கீழே இடம்பெற்றுள்ள, ஆலோசனை வழங்கவும் பட்டனை கிளிக் செய்தால், இப்போது என்ன செய்யலாம் எனும் ஆலோசனையை வழங்குகிறது.
தன்னார்வ பணியில் ஈடுபடவும் என்பதில் துவங்கி, நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பேசவும், வீட்டை சுத்தம் செய்யவும்… என்பது போன்ற ஆலோசனைகள் ஒவ்வொரு கிளிக்கிலும் முன்வைக்கப்படுகின்றன. சில தருணங்களில் உண்மையிலேயே ஊக்கம் அளிப்பதாகவும் அமையலாம்.
அட.... உண்மையில்....உதவிகரமான ஒரு இணைய தளம்....சில சமயம்.... routineஆக....நமது தினசரி வாழ்க்கை மாற்றம் ஏதுமில்லாமல் சென்று கொண்டிருக்கையில் ....திடீரென ஒரு வெறுமை இருப்பது போல் தோன்றும்! எதிலும் விருப்பமின்றி இருப்போம்! அப்போது இந்த தளம் நம்மை உசுப்பேற்ற உதவும்!