ஒரு அருங்காட்சியம் எப்படி இருக்க வேண்டும்? – கிபிலி காட்டும் வழி!
ஒரு அருங்காட்சியகம் சுவாரஸ்யமானதாகவும், ஆன்மாவை இளைப்பாறச்செய்வதாகவும் இருக்க வேண்டும்.
நான் உருவாக்க விரும்பும் அருங்காட்சியம் எப்படி இருக்க வேண்டும் என உணர்த்தும் வகையில், ஸ்டூடியோ கிபிலி நிறுவனர் ஹயாவோ மியாசாகி எழுதியுள்ள வழிகாட்டுதல் குறிப்புகள் தான் இப்படி துவங்குகிறது.
நிறைய கண்டறிதல் நிகழக்கூடிய இடமாக, தெளிவான, சீரான கோட்பாடு அடிப்படையிலானதாக, மகிழ்ச்சி நாடி வரக்கூடியவர்கள் இன்புறக்கூடிய இடமாக, சிந்திக்க விரும்புகிறவர்கள் சிந்தனையில் ஆழக்கூடிய, உணர்தலை நாடுபவர்கள் உணரக்கூடிய இடமாக அருங்காட்சியம் இருக்க வேண்டும் என மியாசாகி தொடர்ந்து குறிப்பிடுகிறார்.
இத்தகைய அருங்காட்சியகத்தை உருவாக்கும் வழியாக, அந்த கட்டிடம், அது ஒரு திரைப்படம் போல ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என குறிப்பிடுபவர், அருங்காட்சியகம், ஆணவமானதாக, பிரும்மாண்டமானதாக, அற்புதமானதாக, மூச்சு திணற வைக்க கூடியதால இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்.
மக்கள் தங்கள் இல்லம் போல உணரக்கூடிய இடமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
சிறுவர், சிறுமியர் வளர்ந்தவர்கள் போல நடத்தப்படாத வகையில் அருங்காட்சியகம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
அருங்காட்சியக பொருட்கள், ஏற்கனவே கிபிலி கலை அபிமானிகளுக்கானதாக மட்டும் இல்லாமல் அமைய வேண்டும் என்றும், அருங்காட்சிய பொருட்கள் அது ஏதோ கடந்த காலத்தின் அருங்காட்சியகம் போல இல்லாமல் அமைய வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
ஆணவமானதாக, பாசாங்காக ஒரு அருங்காட்சியம் இருக்க கூடாது என்றும் கூறுகிறார்.
கிபிலி கலை அபிமானிகளுக்காக ஸ்டூடியோ கிபிலி சார்பில் ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியத்திற்கான இணையதளத்தின் அறிமுக பக்கத்தில், மியாசாகி குறிப்பிட்டுள்ள கருத்துகள் தான் இவை.
அருங்காட்சியக நிகழ்வுகள், குறும்படங்கள் உள்ளிட்ட தகவல்களுடன் அருமையாக உள்ளது இந்த தளம்.- https://www.ghibli-museum.jp/en/kind/