டிவிட்டர் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. டிவிட்டர் சார்ந்து உருவாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவைகள் அவற்றில் முக்கியமானது. அதாவது டிவிட்டரின் மைய சேவையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட துணை சேவைகள்.
பல துணை சேவைகள் டிவிட்டரின் செயல்பாட்டை அறுவடை செய்து பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டாலும், டிவிட்டரின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருந்த சேவைகளும் உண்டு. உதாரணத்திற்கு, டிவிட்டரில் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ள வழி இல்லாத ஆரம்ப காலத்தில், ’டிவிட்பிக்’ துணை சேவை டிவிட்டரில் புகைப்படங்களை பகிர உதவியது.
டிவிட்டரின் இந்த துணை சேவைகள் வரிசையில் இப்போது, டிவீட்ஸ்டீரிம் எனும் சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த சேவை, டிவிட்டரில் குறிப்பிட்ட ஹாஷ்டேகுடன் வெளியான குறும்பதிவுகளை மறுஒளிபரப்பு போல காண வழி செய்கிறது.
கடந்த காலத்தில் வெளியான எந்த ஒரு ஹாஷ்டேகையும் இந்த தளத்தில் சமர்பித்து, அதற்கான கால அளவையும் குறிப்பிட்டால், அந்த காலத்தில் வெளியான குறும்பதிவுகளை அப்படியே காண வழி செய்கிறது. இந்த குறும்பதிவுகளை நிகழ் நேரத்திலும் காணலாம். தேவை எனில் அனைத்து குறும்பதிவுகளையும் எக்செல் கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். குறும்பதிவுகளை உணர் சார்ந்த அலசலுக்கும் உள்ளாக்கி அவற்றின் பின்னே இருந்த மனநிலையை அறிந்து கொள்ளலாம்.
· டிவிட்டர் வளர்ச்சில் மைல்கல் நிகழ்வாக அமையும், ஹட்சன் நதி புகைப்பட பகிர்வு சம்பவத்தில் டிவிட்பிக் தளம் மூலமே புகைப்படம் பகிரப்பட்டது. விமானம் ஒன்று நடுவானில் கோளாறுக்கு உள்ளாகி நியூயார்க்கின் ஹட்சன் நதியில் தரையிறங்கிய போது, பயணிகள் மீட்பு காட்சியை மீட்பு படகில் இருந்து ஜேனிஸ் கிரம்ஸ் என்பவர் பகிர்ந்து கொண்ட இந்த சம்பவமே டிவிட்டரின் உடனடி செய்தி பகிர்வு ஆற்றலை உலகிற்கு உணர்த்திய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது. இந்த இணைய வரலாற்று சம்பவம் தொடர்பான பதிவு.
Thanks for all the sharing sir, is there any other blog or medium in which you are beeing writing