சாட்ஜிபிடி திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடியை எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதில் நல்லதும் உண்டு, தீயதும் உண்டு.
சுருக்கமாக சொன்னால், சாட்ஜிபிடியை ஒரு சாதனமாக பயன்படுத்திக்கொள்ளலாம், தவறில்லை. ஆனால், சாட்ஜிபிடியையே பிரதானமாக பயன்படுத்துவது தவறு. அதாவது, சாட்ஜிபிடியை, ஷேக்ஸ்பியர் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி அதை கல்லூரி பாடத்திற்காகவோ, ஊடக உள்ளடக்கமாகவோ சமர்பிப்பது தவறு!
ஆனால், சாட்ஜிபிடியை இப்படி தான் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிப்பது கடினம். அதைவிட கடினம், ஒரு கட்டுரை அல்லது உள்ளடக்கம் சொந்தமாக எழுதப்பட்டதா அல்லது சாட்ஜிபிடி உருவாக்கியதா? என கண்டறிவது இன்னும் கடினமானது.
இந்த இடத்தில் தான், (https://detector.dng.ai/ ) இணையதளம் வருகிறது.
ஏஐ உள்ளட்டகத்திற்கான துப்பறிவாளனான் இந்த தளம். இதில் உள்ள தேடல் கட்டத்தில், உள்ளடக்கத்தை சமர்பித்தால் அதை ஆய்வு செய்து, அது மனிதர்கள் சொந்தமாக எழுதியதா அல்லது ஏஐ ஆக்கமா? என கண்டறிந்து சொல்கிறது.
டிராப்ட் அண்ட் கோல் எனும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் செயல்படுகிறது. மற்ற மொழிகளிலும் இந்த சேவை அறிமுகம் ஆக உள்ளது.
ஏஐ யுகத்தில் இத்தகைய துப்பறிவாளன் சேவைகள் இனி அதிகம் தேவைப்படும்.!
Vincent Terrasi என்பவர் இந்த சேவையை உருவாக்கிய நிறுவனம் பின்னே இருக்கும் வல்லுனர்.
-