ஒரு நல்ல இணையதளத்திற்கு இடைமுகம் மிக முக்கியம். அதாவது, பயனாளிகள் தளத்தின் உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வசதி. தளத்தின் வடிவமைப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான தளங்களுக்கு அவற்றின் முகப்பு பக்கம் தான் இடைமுகம். உள்ளடக்கத்தின் தன்மைக்கேற்ப முகப்பு பக்கமும், இடைமுகம் அமைந்தால் பயனர் அனுபவம் மேம்பட்டதாக இருக்கும்.
மூவிஸ்பாய்லர்.இயோ (https://www.moviespoilers.io/) தளத்தை இதற்கான உதாரணமாக சொல்லலாம். திரைப்பட முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான இணையதளம் என ஒற்றை வரியில் அறிமுகம் செய்யக்கூடிய இந்த தளம், அதன் அழகிய இடைமுகத்தால் கவர்கிறது.
ஸ்பாய்லர்ஸ் என்பது திரைப்படங்களை பார்ப்பதற்கு முன் சொல்லக்கூடாத தகவல்கள் ஏன கொள்ளப்படுகின்றன. பொதுவாக திரைப்பட முடிவு, முக்கிய அம்சங்கள் அல்லது காட்சிகள், திருப்பங்கள் இத்தகைய தகவல்களாக அமைகின்றன. அதிலும் குறிப்பாக புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் எனில், அவற்றின் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவு முன்கூட்டியே தெரிந்துவிட்டால், படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும் என்பதால் ரசிகர்களும் சரி, விமர்சகர்களும் சரி, இந்த தகவல்களை சொல்லாமல் இருப்பது ஏற்றதாக கருதப்படுகிறது.
மாறாக, திரைப்பட முடிவு தொடர்பான தகவல் இருக்கிறது எனில், அது தொடர்பான எச்சரிக்கையையும் முன்னதாக வழங்கி விடும் ஸ்பாய்லர் அலர்ட் வழக்கமும் இருக்கிறது.
ஆனால், சில நேரங்களில் நாம் பார்த்த படங்களின் முடிவு நமக்கே மறந்து போயிருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கூட குறிப்பிட்ட ஒரு திரைப்படம் எப்படி முடிந்தது என தெரிந்து கொள்ள விரும்பலாம். இது போன்ற தருணங்களில், திரைப்பட முடிவை தெரிந்து கொள்ள வழி செய்கிறது
.
இந்த தளத்தில், திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியான ஆண்டு ( கட்டாயம் இல்லை) ஆகிய விவரங்களை தெரிவித்தால் அந்த படத்தின் கதை, இயக்குனர், முக்கிய அம்சங்கள் மற்றும் முடிவை பட்டியலிடுகிறது.
ஒருவிதத்தில் பார்த்தால், இணைய திரைக்களஞ்சியமான ஐஎம்டிபி தளத்தின் சுருக்கமான வடிவம் போல், திரைப்பட விவரங்கள் அமைந்திருந்தாலும், தளத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, படத்தின் பெயரை குறிப்பிட்டு, அதன் முடிவை தெரிந்து கொள்ள கிளிக் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த இடைமுகத்தின் எளிமையை நிச்சயம் பாரட்ட வேண்டும்.
பி.கு: பெரும்பாலும் ஹாலிவுட் படங்களுக்கானது. இந்திய படங்களையும் தேட முடிகிறது.
Post after a long time!!