நீங்கள் இதற்கு முன் எத்தனை சமூக ஊடக சேவைகளில் உறுப்பினராக இருந்தாலும், புதிதாக அறிமுகம் ஆகியுள்ள மைல்ஸ்டோன்ஸ்.டே (https://milestones.day/ ) தளத்திலும் ஒரு கணக்கு துவக்கி கொள்ளலாம். மற்ற சமூக ஊடக சேவைகள் எல்லாம், பெரும்பாலும் நிலைத்தகவல் பகிர்வுகளுக்கானவை என்றாலும், ( வலைப்பதிவுகள், வலையொலிகள் விதிவிலக்கு), இந்த சேவை உங்கள் வாழ்க்கை மைல்கற்களை பதிவு செய்வதற்காக அமைகிறது. இந்த தளத்தில், பயனாளிகள் தங்களது வாழ்க்கை பயணத்தில் முக்கியமாக அமையும் தருணங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
தினமும் புதுப்பிக்க வேண்டும் என்றில்லை, முக்கிய நிகழ்வுகள், சாதனைகளின் போது மட்டும் அப்டேட் செய்யலாம். இணைய அறிமுகத்திற்கான பயனுள்ள சேவை. மற்ற சமூக ஊடகங்களில் இருந்து முக்கிய பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதியும் இருக்கிறது.
சாட்ஜிபிடி சரிதம் புத்தகம் ஒரு அறிமுகம்
-
Another day, another gem, 💎 thanks a lot