இணைய பூங்கா நூலகம்!
எங்கோ ஒரு பூங்காவில் அமர்ந்தபடி, இணையத்தில் புத்தகம் படிக்கும் உணர்வை பெற வேண்டுமா? பார்க்லைப்ரரி (https://parklibrary.org/) தளம் இத்தகைய அனுபவத்தை அளிக்கும் நோக்கம் கொண்டது.
புத்தகங்கள், பத்திரிகைகள், கலை படைப்புகளை கொண்ட இணைய வெளிப்புற நூலகம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த இணையதளம், இணையத்தில் வாசிப்பதற்கான ஆக்கங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆக்கத்தை வாசிக்க முற்படும் போதும், வெளிப்புற பூங்கா ஒன்றின் ஒலிகள் கொண்ட கோப்பும் உடன் இருக்கும். பூங்கா ஒலிகளை கேட்டபடி புத்தகம் வாசிக்கலாம்.
இணைய நூலகம் தவிர, தகவல் பலகை அமைப்பும் கொண்டுள்ளது. இதில் பதிவு செய்து கொண்டு கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.
அழகான எண்ணம் இந்த தளம். ஆனால், 2023 ல் பதிவேற்றப்பட்ட சொற்ப நூல்களே இருப்பது ஏமாற்றம்.
கிரேக் (https://gregorycotton.ca/ ) என்பவர் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். முழுநேர பொறியாளரான கிரேக், இந்த தளம் தவிர பிரிட்ஜ் எனும் இணையதளமும் உருவாக்கியிருக்கிறார். அந்த தளத்தில் யார் வேண்டுமானாலும் அவருக்கான செய்தியை விட்டுச்செல்லலாம்.
கிரேக்கின் ஏரே.னா பக்கமும் தகவல் சுரங்கமாக இருக்கிறது: https://www.are.na/gregory-cotton/channels
-