உங்கள் இசை ரசனையை காட்சிப்படுத்தும் இணையதளம்!
நீங்கள் ஸ்பாட்டிபை இசை கேட்பு தளத்தில் உறுப்பினர் என்றால், ஐஸ்பர்ஜிபை (icebergify ) தளத்தை அடிக்கடி பயன்படுத்தலாம். உங்கள் இசை ரசனையை உங்களுக்கே அறிமுகம் செய்யும் சேவையாக இந்த தளம் அமைகிறது. அதாவது, ஸ்பாட்டிபையில் நீங்கள் அடிக்கடு கேட்கும் பாடல்களை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் அவற்றை காட்சி வடிவிலான புள்ளிவிவரமாக தொகுத்தளிக்கிறது.
ரசிகர்கள் அதிகம் கேட்கும் பாடல்களின் புள்ளிவிவரங்களை பலவிதமாக காட்சிப்படுத்திக்கொள்ளாம் என்றாலும், இந்த தளம் கொஞ்சம் வித்தியாசமாக, இந்த தகவல்களை பனிப்பாறை வடிவில் முன்வைக்கிறது.
கடலில் மிதக்கும் பனிப்பாறைகளை நீங்கள் கவனித்திருக்கலாம். பனிப்பாறைகள் மிதக்கும் போது அவற்றின் பெரும் பகுதி தண்ணீரில் மூழ்கியிருக்க, ஒரு பகுதி மட்டுமே வெளியே தெரியும். இந்த தன்மையை அடிப்படையாக கொண்டு, ’ஐஸ்பர்ஜிபை’ தளம், ஸ்பாட்டிபை பாடல்கள் புள்ளிவிவரங்களை பனிப்பாறை வடிவில் அளிக்கிறது.
பாறையின் மிதக்கும் பகுதியில், அதிகம் கேட்கும் பாடகர்களை அடையாளம் காணலாம். தண்ணீரில் மறைந்திருக்கும் பகுதியில் ரசிகர்கள் அதிகம் கேட்காத பாடகர்களின் பெயர்களை காணலாம். புதிய பாடகர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் இந்த சேவை உதவும்.
· அதிகம் திட்டமிடாமலே இந்த மடலில் ஸ்பாட்டிபை சார்ந்த துணை சேவைகளை அதிகம் எழுதியிருக்கிறேன்.