ஏஐ மூலம் பரிசு பொருட்களை தேர்வு செய்ய உதவும் தளம்
என்ன புத்தகம் படிக்கலாம் என்பதைவிட, என்ன பரிசுப்பொருள் கொடுக்கலாம் எனும் கேள்வி பொதுவாக அனைவருக்குமே எழக்கூடியது. இப்போது இந்த கேள்விக்கு ஏஐ உதவியோடு பதில் அளிக்க கூடிய கிப்ட் அசிஸ்டண்ட் (
) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில், யாருக்கு, எதற்காக பரிசளிக்க வேண்டும் என்பதை தெரிவித்து, எந்த வகையான பரிசுகளை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டால் அதற்கேற்ப பரிசுப்பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை இணையத்தில் வாங்குவதற்கான இணைப்பையும் வழங்குகிறது.
பரிந்துரைக்கப்பட்ட பரிசுகள் ஏற்றதாக இருக்கிறது அல்லது இல்லை எனும் எதிர்வினையை வழங்கு, அடுத்த கட்டமாக தேடும் வாய்ப்பும் இருக்கிறது.
எந்த அளவுக்கு விளம்பர நோக்கிலான சேவை, எந்த அளவு செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்துகிறது எனத்தெரியவில்லை, ஆனால், ஏஐ அலையை அழகாக பயன்படுத்திக்கொள்ளும் இணையதளங்கள் வரிசையில் இன்னொன்று!.
-