டிவிட்டர் பதிவுகளுக்கான ஊக்கம் அளிக்கும் தளம்
டிவிட்டர் திருடன் எனும் பெயர் புதுமையாக இருக்கிறதா? இதே பெயரில் புதிய இணையதளம் ஒன்று அறிமுகம் ஆகியிருக்கிறது. (https://shrt.cat/tweet_thief ).
டிவிட்டரில் பயனாளிகளை கவரும் வகையில் குறும்பதிவுகளை வெளியிடுவதற்கான ஊக்கம் பெற வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளதாக இந்த தளம் தெரிவிக்கிறது. டிவிட்டர் கணக்கு மூலம் உள் நுழைந்தால், பயனாளிகள் பின் தொடர்பும் டிவிட்டர் கணக்குகளை அலசி ஆராய்ந்து அவற்றில் அதிகம் வரவேற்பு பெற்ற சிறந்த குறும்பதிவுகளை கண்டறிந்து சொல்வதன் மூலம் இதைச்செய்கிறது.
எந்த ஒரு டிவிட்டர் கணக்கின் பயனர் பெயரையும் சமர்பித்து அந்த கணக்கின் சிறந்த குறும்பதிவுகளை பெறலாம் என்கிறது இந்த சேவை.
நம்முடைய டிவிட்டர் கணக்கை வைத்து உள்ளே நுழைய வேண்டியிருப்பது தான் ஒரே பிரச்சனை.
டிவிட்டர் பின் தொடர்பாளர்களுக்காக என்று தனிப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்கி, அதன் வரவேற்பை கண்காணிக்க வழி செய்யும், ஷர்ட்கேட் (https://shrt.cat/) எனும் தளத்தின் துணை சேவையாக இது அமைகிறது.