இது சாட்ஜிபிடி ஹேர்ஸ்டைல்
நம்மூரில் ரஜினி ஹேர்ஸ்டைல் பிரபலம். இக்கால தலைமுறைக்கு பிடித்தமான ஹேர்ஸ்டைலுக்கு யாரை உதாரணம் காட்டுவது எனத்தெரியவில்லை. ஆனால், ஹேர்ஸ்டைல் தொடர்பான ஆலோசனை தேவை எனில் சாட்ஜிபிடியை நாடலாம். அதாவது, பயனாளிகள் தங்களுக்கு பொருத்தமான புதிய ஹேர்ஸ்டைலை முயன்று பார்ப்பதற்கு முன் அதை காட்சி வடிவில் கற்பனை செய்து பார்க்க வேண்டும் எனில், சாட்ஜிபிடி மூலம் அதை பார்பர்ஜிபிடி (
https://www.barbergpt.ai/) சாத்தியமாக்குகிறது.
இந்த தளத்தில் பயனாளிகள் தங்கள் முக வடிவை பதிவேற்றினால், அதில் உள்ள தலை முடி வாகிற்கு ஏற்ப எந்த வகையான ஹேர்ஸ்டைல் எல்லாம் எப்படி இருக்கும் என காண்பிப்பதாக இந்த தளம் தெரிவிக்கிறது. இதற்கு முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும் வண்ணமயமான உதாரணம் லயிக்க வைக்கிறது.
உங்கள் படத்தை பதிவேற்றி விட்டு தேவையான ஹேர்ஸ்டைலை தெரிவித்து சோதித்துப்பார்க்கலாம். இதில் பதிவேற்றப்படும் படங்கள் மற்றும் தரவுகள் தனியுரிமை தன்மை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஆண்கள் மட்டும் முயன்று பார்க்கலாம். சாட்ஜிபிடி கொண்டு உருவாகும் குடிசைத்தொழில் பாணி இணையதளங்களில் இன்னொன்று!