ஏஐ பரிந்துரைக்கும் உங்களுக்கான அபிமான திரைப்படங்கள் !
ஏஐ ஆற்றல் கொண்டு உங்கள் ரசனைக்கு ஏற்ற தனிப்பட்ட திரைப்படங்களை பரிந்துரை செய்வதாக சொல்கிறது மூவ்ஏஐ.நெட் (
இந்த தளத்தில் பயனாளிகள் தங்களுக்கு விருப்பமான திரைப்பட வகை, ரகம், மனநிலை ஆகியவற்றை தேர்வு செய்து, நாடு மற்றும் மொழியையும் குறிப்பிட்டால் அவற்றின் அடிப்படையில் பயனாளி விரும்பக்கூடிய அடுத்த திரைப்படத்தை இந்த தளம் பரிந்துரைக்கிறது. திரைப்படம் வெளியான ஆண்டு மற்றும் ஐஎம்டிபி ரேட்டிங் ஆகியவை அடிப்படையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஏஐ துணை கொண்டு தனிப்பட்ட திரைப்பட பரிந்துரை சேவை என்பது கவனத்தை ஈர்த்தாலும், ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற திரைப்பட பரிந்துரை சேவைகள் இதே போன்ற பரிந்துரை வசதியை அளித்து வருவது நினைவுக்கு வருகிறது. இந்த தளத்தில் ஏஐ அடைமொழியை தவிர என்ன புதுமை என்று தெரியவில்லை.
இந்த சேவையை வரம்புகள் இல்லாமல் பயன்படுத்த கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும்.
ஏஐ போர்வை போர்த்திய இன்னொரு தளம் போலவே தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
-