அகத்தியர் காவிரியை தனது கமன்டலத்தில் அடக்கியது போல, இணையத்தை கையடக்கமாக சுருக்கித்தரும் முயற்சிகள் தொடர்கின்றன. பைண்ட்யூஸ்புல்.சைட் (https://www.finduseful.site/? ) தளத்தையும் இந்த வரிசையில் தான் சேர்க்கத்தோன்றுகிறது.
இந்த தளம் நூற்றுக்கு மேல் பயனுள்ள இணையதளங்களை தொகுத்தளிக்கிறது. வெறும் நூறு தளங்கள் என பட்டியலிடலாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்கள் அழகாக முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவற்றின் வகைக்கு ஏற்ப குறிச்சொற்கள் கொண்டு அடையாளம் காணப்படும் வகையிலும் தொகுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர, தனியே வரிசையாகவும் தளங்களை பார்க்கலாம். ஒவ்வொரு தளத்தையும் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. குறிபிட்ட தளத்தை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இந்த தளங்கள் எல்லாம் ஒரு பொது தன்மை கொண்டுள்ளன. இவை எல்லாமே, இணைய சேவைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள இணையதளங்கள்.
ஆர்ஜித் என்பவர், தனது இணைய சேவை உருவாக்கத்தில் கைகொடுத்த இணையதளங்கள் தந்த அனுபவத்தில் மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் அந்த வகை தளங்களை தொகுத்தளித்துள்ளார்.
மிக்க நன்றி.
Good day, Sir. This is extremely helpful information. Thank you for your efforts.