காதல் தோல்விக்கு ஒரு சாட்ஜிபிடி
இணைய உலகில் சாட்ஜிபிடி தவிர சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற சாட்பாட்கள் இருக்கின்றன. இவற்றில் காதல் தோல்விக்கு உள்ளானவர்கள் உரையாடி ஆறுதல் பெற உதவும் சாட்பாட்டாக புரோக்க்கன்பியர் (https://brokenbear.com/) அமைகிறது.
சிறார்களுக்கு பிடித்தமான டெட்டி பியரை நினைவுபடுத்தும் வகையில், ஏஐ கரடியை அடிப்படையாக கொண்ட இந்த இணைய சாட்பாட்டுடன் உரையாடி காதல் தோல்வி சோகங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
காதன் காயங்களை யாருடனாவது பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைப்பவர்கள் இந்த ஏஐ கரடியுடன் உரையாடலாம். அதற்கேற்ப உங்கள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் என இந்த இணைய கரடி உரையாடலை ஊக்குவிக்கிறது.
இந்த கரடியிடம் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு வேறு வேலை பார்க்கப்போகலாம். அதே நேரத்தில், உணர்வு நோக்கிலான பிரச்சனை இருந்தால், தொழில்முறை ஆலோசனையை நாடவும் என்றும் இந்த கரடி எச்சரிக்கிறது. கொஞ்சம் முட்டாள் கரடி என்பதால் பொறுத்துக்கொள்ளவும் என்று தெரிவிக்கிறது.
இந்த சாட்பாட் அப்படி என்ன தான் சொல்கிறது என சோதித்துப்பார்க்கும் நோக்கிலும் பயன்படுத்தலாம்.
இந்த சாட்பாட் செயல்படும் விதம், தரவுகள் சேகரிப்பு பற்றி எல்லாம் விரிவாக தனியே ரெட்டிட் தளம் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. - https://www.reddit.com/r/BrokenBear/comments/14dawwl/privacy_faq_v_100_effective_from_19_june_2023/