இணைய ஸ்பேனர்களும், வலை திருகாணிகளும் என்று வர்ணித்து எழுதினால் எப்படி இருக்கும்? இணையதளங்கள் அல்லாமல், குறிப்பிட்ட நோக்கிலான இணைய சேவைகளை இப்படி வர்ணிக்கலாம். ஆங்கிலத்தில் இவற்றை வெப் டூல்ஸ் என்கின்றனர். உதாரணத்திற்கு, எழுத்து வடிவிலான கோப்புகளை பிடிஎப் கோப்பாக மாற்றித்தரும் சேவையை குறிப்பிடலாம். உருமாற்றி சேவைகளின் கீழ் இது வருகிறது.
இதே போல, இணையதள நிலையை கண்டறியும் சேவை, பயனாளிகளின் ஐபி முகவரியை கண்டறியும் சேவை என பல வகையான வலை கருவிகள் அல்லது சாதனங்கள் இருக்கின்றன.
இத்தகைய வலை சாதனங்களில் தேர்ந்தெடுத்தவற்றை ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறது 10டெப்டூல்ஸ் (
).
பயன்பாடு சார்ந்தவை, உருமாற்றிகள், உள்ளடக்கம் என பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள வலை சாதனங்களை இந்த தளம் பட்டியலிடுகிறது. சேவைகளின் ஐகான் மற்றும் சுருக்கமான அறிமுகம் என இதன் இடைமுகம் எளிமையாக உள்ளது.
ஒரு காலத்தில் பயனுள்ள இணையதளங்களை தொகுத்தளித்த யாஹு இணைய கையேட்டை நினைவுபடுத்தும் வகையில் வலை சாதனங்களுக்கான கையேடாக இந்த தளம் அமைகிறது. ஆனால் கையடக்க கையேடு.
-
இதே போன்ற இணைய கையேடு பற்றிய பதிவு:
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, happy to find this page
மிக்க நன்றி! மிகவும் கையடக்க வடிவம்தான்! நிறைய டூல்கள் பற்றி காணக்கிடைக்கிறது! ஆங்கில தட்டச்சு செய்து தமிழில் தலைப்புகள்... email மற்றும் கடிதங்கள் எழுத வசதியாக 'exe' வகை டூல்கள் ஏதும் பற்றி சொல்ல முடியுமா?! உதாரணமாக... ஆங்கிலத்தில் attachmentஆக வரும் ஃபைல்களை டவுன்லோட் செய்தபின் file renameல் சென்று அதற்கு தமிழில் தலைப்பிட முடியுமா?!....அதற்கான டூல் பற்றி கேட்கிறேன்!