சாட்ஜிபிடி தெரியும்! சாட்பிடிஎப் (ChatPDF ) தெரியுமா?
சாட்ஜிபிடி போலவே, பிடிஎப் கோப்பு வடிவிலான ஆவணங்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஏஐ திறன் கொண்ட சேவை தான் சாட்பிடிஎப் (https://www.chatpdf.com/ ).
சாட்ஜிபிடியை அடிப்படையாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை இப்போது நீங்கள் யூகித்திருக்கலாம். ஆம், இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் நவீன சாட்பாட்டான சாட்ஜிபிடியிடம், கேள்விகள் கேட்டு பதில் பெறுவதோடு, பெரிய கட்டுரைகள் அல்லது புத்தகங்களை படிக்க கொடுத்த அவற்றின் சுருக்கங்களை பெறலாம் அல்லது துணை கேள்விகளை கேட்கலாம் என்பது போலவே,ஒருவரிடம் உள்ள பிடிஎப் கோப்புடன் உரையாடி பதில் பெறும் வகையில், சாட்ஜிபிடியை ஆதாரமாக கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
பிடிஎப்புடன் உரையாட விரும்புகிறவர்கள், அதாவது அந்த கோப்பில் தகவல்களை சாறு பிழிந்து அறிய விரும்புகிறவர்கள், சாட்பிடிஎப் தளத்தில் அந்த கோப்பை சமர்பித்து கேள்விகள் கேட்கலாம். கோப்பில் உள்ள தகவல்களை சுருக்கித்தர கோருவதோடு, பலவிதமான கேள்விகளை கேட்டு பதில் பெறலாம்.
மாணவர்கள் வீட்டுப்பாடத்தில் இருந்து பணியிடம், ஆய்வு என பலவிதமாக இந்த சேவையை பயன்படுத்தலாம். அடிப்படை சேவை இலவசமானது. ஆனால், வரம்பில்லாமல் பயன்படுத்த வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
-
சாட்பாட்களுக்கான புதிய சோதனை பற்றி அறிய இந்த பதிவு!
-
மிக்க நன்றி நண்பரே.
இதை முயற்சி செய்து பார்த்த பொழுது எந்த தகவலும் பெறப்படவில்லை.