ஆயிரம் பயனுள்ள பொருட்கள்
’நீங்களே செய்து பாருங்கள்’ கோட்பாடு என வரும் போது, இன்ஸ்டரக்டபில்ஸ் (https://www.instructables.com/ ) தளம் தான் முதலில் நினைவுக்கு வரக்கூடியது. இது தளம் அல்ல இணைய சமூகம் என்பதும் கவனிக்க வேண்டியது. இதே போலவே, எதையும் தானே செய்து பார்க்கும் விருப்பம் கொண்டவர்களை கவர்ந்திழுக்கும் தளமாக அமைகிறது மேக் இட் யுவர்செல்ப் (https://makeityourself.org/ ). மிக எளிதாக அமைந்திருக்கும் இந்த தளம், பயனாளிகள் செய்து பார்க்க கூடிய ஆயிரம் பொருட்களையும், அதற்கான வழிகளையும் விளக்கும் கையேட்டை உருவாக்கி பிடிஎப் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்ய வழி செய்கிறது.
இந்த மின்னூலின் சிறப்பு என்னவெனில், உலகம் முழுவதும் பலரால் கண்டறியப்பட்டு இணையத்தில் பகிரப்பட்ட சுய செய்தல் வழிமுறைகளை திரட்டி தொகுத்தளிக்கப்பட்டுள்ளது தான். தனித்தனி தலைப்புகளில் இந்த வழிகாட்டுதல்களை காணலாம். அதிக புகைப்படங்கள் மற்றும் சொற்பமான எழுத்து வடிவ விளக்கத்துடன் நூல் அமைந்துள்ளது. முயன்று பாருங்கள்.
தொடர்புடைய பதிவு:கூகுள் விமர்சன குறிப்பு-