இசை மனு இணையதளம்
இசை ஆர்வம் கொண்டவர்கள் ’ஒன்–சப்மிட்’ இணையதளத்தை (https://www.one-submit.com/ ) குறித்து வைத்துக்கொள்ளலாம். ஆனால், இது இசைப்பிரியர்களுக்கான தளம் என்பதை விட இசை கலைஞர்களுக்கான இணையதளம். அதிலும் வளரும் இசை கலைஞர்களுக்கானது. அவர்கள் தங்கள் இசையை பிரபலமாக்குவதற்கான மேடையாக இந்த தளம் விளங்குகிறது.
இந்த தளத்தின் மூலம் புதிய இசை கலைஞர்கள் தங்கள் பாடல்களை ஸ்பாட்டிபை உள்ளிட்ட இசை கேட்பு சேவைகளில் சமர்பிக்கலாம். ஒவ்வொரு இசை கேட்பு சேவையாக தனித்தனியே இசையை அளிப்பதற்கு பதில், இந்த தளம் வாயிலாக முன்னணி இசைகேட்பு சேவைகள் அனைத்திலும் தங்கள் இசையை சமர்பிக்கலாம். இதை குறிக்கும் வகையில் தான் ’ஒன் – சப்மிட்’ எனும் பெயரும் அமைகிறது.
ஸ்பாட்டிபை தவிர, யூடியூப் இசை சேனல்கள், டிக்டாக் இசை சேனல்கள், இணை வானொலிகள், இசை வலைப்பதிவுகள், இசைத்தட்டு நிறுவனங்கள் என எல்லா வகையான இசை மேடைகளிலும் இசை கலைஞர்கள் தங்கள் புதிய இசையை இந்த தளம் வாயிலாக சமர்பிக்கலாம்.
ஸ்பாட்டிபை தளத்தின் முதல் பக்க பிளேலிஸ்ட்டிலோ அல்லது யூடியூப் இசை சேனல் விமர்சனத்தில் இடம்பெற்றாலோ புதிய பாடர்களுக்கு தேவையான கவனம் கிடைக்கும் அல்லவா? அதை தான் இந்த தளம் செய்கிறது.
இசை கலைஞர்கள், இசையை உருவாக்கிய பின் அதை விளம்பரம் செய்வதில் நேரத்தை செலவிடுவதை குறைக்கும் வகையில் இந்த தளம் அமைகிறது. எந்த எந்த மேடைகளில் பாடல்களை சமர்பிக்க வேண்டும் என கலைஞர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கேற்ப கட்டணம் உண்டு. இவ்வாறு இசை மனு அளித்த பிறகு, இந்த தளத்தில் உள்ள சுவைஞர்கள் அந்த பாடலை கேட்டு அதற்கான விமர்சனத்தையும் வழங்குவார்கள்.
இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் இசை கலைஞர்களில் திறமை மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டும் மாதந்தோறும் ஒரு கலைஞர் அறிமுகம் செய்யப்படுகிறார். இது புதிய கலைஞர்களுக்கு வெளிச்சமாக அமைவதோடு, ரசிகர்கள் புதிய கலைஞர்களை கண்டறியவும் உதவும்.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், இதே போன்ற தளம், ஆவணப்படங்கள், புத்தகங்கள் இன்னும் பிற படைப்புக்க முயற்சிகளுக்கு அமைக்கப்படலாம் என தோன்றும்.
-
இதற்கு முன் எழுதிய இசை தளங்கள்-
https://substack.com/search/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88?focusedPublicationId=46868