குறும் நிதி திரட்ட உதவும் இணையதளம்
இணைய உலகில் கூட்ட நிதி (crowdfunding) திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பிரபலமானது. கிக்ஸ்டார்ட்டர் போலவே மேலும் பல இணையதளங்கள் இருக்கின்றன.
கிக்ஸ்டார்ட்டர் புதிய பெரிய திட்டங்களுக்கானது என்றால், படைப்பூக்கம் சார்ந்தவர்கள் அபிமானிகளிடம் இருந்து நிதி திரட்ட உதவும் பை மீ ஏ காபி (https://www.buymeacoffee.com/ ) போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. ரசிகர்கள், தங்கள் ஆதரிக்க விரும்பும் படைப்பாளிகளுக்கு சிறிய அளவில் நிதி அளிக்க இந்த தளங்கள் உதவுகின்றன.
ஒரு நண்பருக்கு காபி வாங்கித்தருவது போல படைப்பாளிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தங்களால் இயன்ற தொகையை அளிக்கலாம்.
இந்த வரிசையில் இப்போது, பை மீ ஜூஸ் (https://buymejuice.co/) எனும் தளம் அறிமுகம் ஆகியுள்ளது. படைப்பாளிகளுக்கு பழச்சாறு வாங்கு கொடுத்து ஊக்குவிக்க இந்த தளம் உதவுகிறது.
--
கிக்ஸ்டார்ட்டர் போன்ற முன்னோடி கூட்ட நிதி சேவை பற்றி அறிய:
-