தொழிற்சங்கங்கள் ஏன் தேவை என உணர்த்தும் இணையதளம்!
நாம் இன்று பணியிடத்தில் அனுபவிக்கும் சலுகைகளில் பல, தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தொழிற்சங்கம் அமைத்து, போராடியதால் கிடைத்தது. ஐந்து நாள் வேலை மற்றும் நோய் விடுப்பு சம்பளம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தொழிற்சங்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வார் ஆன் வாண்ட் (https://waronwant.org/news-analysis/ten-reasons-why-unions-are-important) இணையதளத்தின், கட்டுரை ஒன்றின் அறிமுகம் தான் இந்த வாசகங்கள்.
தொழிற்சங்கங்கள் ஏன் தேவை என்பதற்கு இந்த பதிவு பத்து காரணங்களை பட்டியலிடுகிறது.
முதல் காரணம் ஒற்றுமை என்கிறது.
தொழிற்சங்கம், தங்கள் பணியிட சூழல் மற்றும் நிபந்தனைகளை நிர்வாகத்திடம், சக்திவாய்ந்த கூட்டு குரலாக தெரிவிக்க வழி செய்கிறது. பாதுகாப்பான, நியாயமான பணியை பெற வலியுறுத்துகிறது.
மற்ற காரணங்கள்:
மேம்பட்ட நிபந்தனைகள், சூழல்
மேலும் விடுமுறை
கூடுதல் சம்பளம்
சமவாய்ப்பு, பாகுபாடு பாதுகாப்பு
பேறுகால விடுப்பு
பாதுகாப்பு
ஆரோக்கியம்.
சட்ட உதவி
உங்களுக்கு என ஒருவர்.
இங்கிலாந்தை மையமாக கொண்ட இந்த தளத்தின் வாதம் உலகம் முழுவதும் பொருந்தும். வறுமை ஒழிப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பிற்காக குரல் கொடுக்கும் இந்த தளம் வறுமை என்பது அரசியல் தன்மை கொண்டது என்கிறது. மேலும் அறிய: https://waronwant.org/about
=-