ஏஐ தேடியந்திரம் என கூகுளில் தேடினால் வரும் தேடல் பட்டியலில் முதல் சில பக்கங்களில் இடம்பெறவில்லை என்றாலும், லுத்விக்.குரு (ludwig guru ) சேவையை அருமையான ஏஐ தேடியந்திரம் என கொள்ளலாம்.
லுத்விக் குரு வழக்கமான தேடியந்திரமும் இல்லை. அதே நேரத்தில் ஏஐ அலைக்கு நடுவே முளைத்த திடீர் தேடியந்திரமும் அல்ல. சாட்ஜிபிடி அறிமுகத்தை அடுத்து ஏஐ தொடர்பாக பரவலான ஆர்வம் ஏற்படுவதற்கு முன்பே, ஏஐ திறன் கொண்ட புதுமையான தேடியந்திரமாக லுத்விக்,குரு அறிமுகமானது.
லுத்விக் முழு வீச்சிலான தேடியந்திரம் அல்ல, மாறாக ஆங்கிலத்தில் சிறப்பாக எழுத உதவும் தேடியந்திரம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதி தரும் சேவை அல்ல. ஆங்கிலத்தில் எழுதும் போது, மனதில் உள்ள எண்ணங்களை சரியாக வெளிப்படுத்த உதவும் வகையில் பொருத்தமான ஆங்கில வாசககங்களை லுத்விக் சேவை பரிந்துரைக்கிறது.
அதே போல, பயனாளிகள் எழுதிய ஆங்கில் வாசகத்தில் உள்ள பிழைகளை திருத்தி மேம்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.
அந்த வகையில், இதை ஆங்கில வாக்கிய தேடியந்திரம் என குறிப்பிடலாம். மொழியியல் தேடியந்திரம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆங்கிலத்தை பேசு மொழியாக கொள்ளாதவர்கள், ஆங்கிலத்தில் எழுத முற்படும் போது, அதில் உள்ள வாக்கிய பிழைகளை கலந்து, முறையாக ஆங்கிலத்தில் எழுதுபவர்களைப் போல நேர்த்தியான மொழி நடையில் எழுத உதவுகிறது இந்த சேவை. இதற்கேற்ப, பயனாளிகள் எழுதும் வாக்கியங்களுக்கு ஏற்ற பொருத்தமான ஆங்கில வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறது.
ஆனால், சாட்ஜிபிடி போல இணையத்தில் இருந்து தப்பும் தவறுமாக உருவித்தராமல், ஆய்வுக்கட்டுரைகள், கல்விக்கூட அறிக்கைகள், இதழியல் தரவுகள் உள்ளிட்ட நம்பகமான இடங்களில் இருந்து பொருத்தமான வாக்கியங்களை சுட்டிக்காட்டுகிறது.
இந்த வாக்கிய பரிந்துரைகள் வாயிலாக, எழுத முற்படும் பொருளுக்கு ஏற்ற வாசகங்களை அமைத்துக்கொள்ளலாம் என்பதோடு, ஆங்கில வாக்கிய பயன்பாடு பற்றியும் கற்றுக்கொள்ளலாம். ஆங்கில மொழிக்கான பயிற்சியாகவும் இந்த தேடியந்திரம் விளங்குவதை உணரலாம்.
உதாரணமாக, ஆன் ஏ டெய்லி ரொடேஷன் எனும் ஆங்கில வாக்கியம் சார்ந்த பல்வேறு பயன்பாடு தொடர்பான பரிந்துரையை காணுங்கள்: https://ludwig.guru/s/on+a+daily+rotation
· லுத்விக் குரு தேடியந்திரம் தொடர்பான பழைய அறிமுகம்!
-
மேலும் சில ஏஐ சேவைகள்
Keep posting on lot of AI tools sir