புத்தகங்களை தேட ஒரு ஏஐ தேடியந்திரம்!
உங்கள் ஏஐ வாசிப்பு வழிகாட்டி, புரட்சிகர புத்தக தேடியந்திரம் என்றெல்லாம் உயர்வுநவிர்ச்சியாக, ’புக் அபவுட் ஏஐ’ (https://bookabout.io/) தேடியந்திரத்தை வர்ணிக்க ஆசையாக இருக்கிறது. அதற்கேற்ப, உங்களுக்கு பிடித்தமான அடுத்த புத்தகத்தை கண்டறிய ஏஐ நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனும் இதன் அறிமுக வாசகமும் கவர்ந்திழுக்கலாம்.
ஆனால், இந்த மேல்பூச்சுக்களை மீறி, இது ஒரு புத்தக தேடியந்திரமே தவிர, இதன் ஏஐ அம்சம் பட்டு குஞ்சம் போல ஓட்ட வைக்கப்பட்டது தான் என நினைக்கத்தோன்றுகிறது.
புத்தகங்களின் தன்மை அடிப்படையில் பயனாளிகள் படிக்க விரும்பும் புத்தகத்தை பரிந்துரைப்பதாக இந்த தேடியந்திரம் சொல்கிறது. அதாவது பயனாளி, இந்த வகையான புத்தகம் தேவை எனத்தெரிவித்தால், ஐந்து லட்சம் புத்தகங்களுக்கு மேல் தேடி, தொடர்புடைய பொருத்தமான புத்தகங்களை பட்டியலிடுவதாக சொல்கிறது.
இப்படி பட்டியலிட ஏஐ நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதாக சொல்கிறது. ஏஐ நுட்பம் வாயிலாக, புத்தகங்களின் தன்மையை தெரிந்து கொண்டு அவற்றில் இருந்து தேடித்தருவதாக சொல்லப்படுவது புதுமையான சேவை போலத் தோன்றலாம்.
ஆனால், சிக்கல் என்னவெனில் இதே போன்ற புத்தக பரிந்துரை தளங்கள் ஏற்கனவே எண்ணற்றவை இருக்கின்றன. இவற்றில் பல ஏற்கனவே ஏதோ ஒரு ஏஐ அம்சத்தை பயன்படுத்துகின்றன. அதே வகையைச் சேர்ந்ததாக காட்சி அளிக்கும் இந்த தேடியந்திரம் இப்போதைய ஏஐ அலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு, ஏஐ மூலம் புத்தக தேடல் வசதியை அளிப்பதாக சொல்கிறது.
இத்தகைய ஏஐ போர்வை போர்த்திய தளங்களில் கவனம் தேவை.
பி.கு: ஏஐ வாசிப்பு சேவை தொடர்பாக தேடும் போது இந்த தளத்தை பட்டியலிடும் வலைப்பதிவை கூகுள் முன்னிறுத்துவதை என்னவென சொல்வது!
http://cybersimman.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+