இணைய அறம் உணர்த்தும் இணையதளம்!
மாற்று இணையதளங்களை தேட வழி செய்யும் சேவைகளில் ஒன்றான, அல்டர்னெட்டிவ்.நெட் (alternativeto.net) இணையதளம் பற்றி தனியே விரிவாக அறிமுகம் செய்ய வேண்டும். இப்போதைக்கு இந்த தளத்தின் செயல்திறன் பற்றி ஒரு சிறு குறிப்பை மட்டும் பார்க்கலாம்.
இணையதளங்களை பட்டன்கள் வாயிலாக அணுக வழி செய்யும், இண்டெர்நெட்பன்னஸ்.ஆர்க் எனும் இணையதளம் இருந்தது. வயதானவர்களுக்கு இணைய பயன்பாட்டை எளிகதாக்கும் நோக்கம் கொண்ட இந்த தளம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை.
இதே போன்ற இணையதளங்கள் வேறு இருக்கின்றனவா என அறிய அல்டர்நெட்.நெட் தளத்தில் தேடிப்பார்த்த போது, இந்த தளம் தொடர்பான சுருக்கமான அறிமுகத்தோடு, அதன் கீழே, நிறுத்தப்பட்டு விட்டது எனும் குறிப்போடு, இந்த தளம் தொடர்ந்து செயல்பாட்டில் இல்லை, இதன் பழைய வடிவத்தை காண, இணைய காப்பகத்திற்கு செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த அறிவிப்பை முக்கியமானதாக கருத வேண்டும். ஏனெனில் இந்த தளம் தொடர்பாக கூகுளில் தேடினால் அதன் செயலிழந்த வடிவை காண முடியுமேத்தவிர, அதன் நிலை குறித்த விவரங்களை கண்டறிவது கடினம்.
ஆனால், அல்டர்னெட்டிவ் இணையதளம், இணைய பட்டன்கள் தளம் மூடப்பட்டு விட்டது என்பதை உணர்ந்து அதை தனியே குறிப்பிடவும் செய்கிறது. இது செயல்திறனுக்கான உதாரணம் மட்டும் அல்ல, தேடியந்திரங்களிடம் இருந்து எதிர்பார்க்க கூடிய இணைய அறமும் தான். தேடப்படும் ஒரு இணையதளம் பயன்பாட்டில் இல்லை என்றால், அதை கண்டுணர்ந்து குறிப்பிடுவது இணைய அறம் தானே!
-