நீங்கள் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்கள் -1 ( ஏஐ இணையதளங்கள்)
1. தேர் ஈஸ் ஏன் ஏஐ பார் தட் - https://theresanaiforthat.com/ ( ஏஐ யுகத்தின் யாஹு இந்த தளம். ஏஐ சேவைகளுக்கான கையேடாக விளங்கும் வகையில் புதிதாக அறிமுகமாகும் ஏஐ சேவைகளை அறிமுகம் செய்து பட்டியலிடுகிறது. இந்த அறிமுகமும் விரிவாக அமைகிறது. ஏஐ சேவைகள், பல இந்த தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தங்களுக்கான அங்கீககாரமாக குறிப்பிடும் வழக்கம் கொண்டிருப்பதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை உணரலாம். )
2. பிரப்ளக்சிட்டி - https://www.perplexity.ai/ ( புதிய அலையென உருவாகத்துவங்கியிருக்கும் ஏஐ சேவைகளுக்கு மத்தியில், ஏஐ தேடியந்திரமாக முன்னிலை பெற்றுள்ள சேவை. கூகுளுக்கு சவால் விடும் சேவை என பலரால் வர்ணிக்கப்படும் பிரப்ளக்சிட்டி, ஏஐ துணையோடு கேள்வி பதில் வடிவில், தேடல் சேவை அளிக்கிறது. இணையத்தில் துழாவி தொகுத்து தரும் பதில்களுக்கான ஆதாரங்களையும் பட்டியலிடுகிறது )
3. குவில்பாட் – https://quillbot.com/ ( ஏஐ துணை கொண்டு எழுத உதவும் சேவை. சாட்ஜிபிடிக்கு முன்பே அறிமுகமான மூல சேவை என்பதோடு, பயனாளிகள் எழுத உதவுகிறதே தவிர அவர்களுக்காக எழுதித்தருவதில்லை. எழுதியதை இதில் சமர்பித்து, இலக்க்கண சுத்தம், வாக்கிய தூய்மையோடு மாற்றி அமைத்துக்கொள்ளலாம். )
4. லுத்விக்குரு – https://ludwig.guru/ ( ஏஐ சார்ந்த மற்றொரு மூல சேவை. வாக்கிய தேடியந்திரம் என வர்ணிக்கப்படும் இந்த தளம், ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளதவர்கள் ஆங்கிலத்தில் சரியாகவும், சரளமாகவும் எழுத உதவுகிறது.)
5. ரைட்சானிக்-
( சாட்ஜிபிடியை இயக்கும் ஜிபிடி மொழி மாதிரி சார்ந்தது என்றாலும், சாட்ஜிபிடிக்கு முன் அறிமுகமானது. ஜிபிடி சார்ந்த துணை சேவைகளில் முதன்மையானது. இப்போது வர்த்தக நெடி அடிக்கிறது).
6. வேர்டுடியூன்–
( இஸ்ரேலின் ஏ121.காம் நிறுவனம் உருவாக்கிய ஏஐ துணை கொண்டு எழுதும் சேவை. சாட்ஜிபிடி போன்ற சேவைகளை சார்ந்திராமல், சொந்தமாக என்.எல்.பி எனப்படும் இயற்கை மொழி செயலாக்க திறன் நுட்பத்தில் இயங்கும் சேவை. சாட்ஜிபிடிக்கு முன் அறிமுகமான மூல சேவைகளில் ஒன்று).
7. குவிக்டிரா -
https://quickdraw.withgoogle.com/
( ஏஐ சேவைகளை பொருத்தவரை கூகுள் தான் பலவிதங்களில் முன்னோடி. கோடு போட்டால் ரோடு போடுவது என்று சொல்வதைப்போல, மனிதர்கள் திரையில் வரைந்து காட்டும் கிறுக்கல்களை அதன் முழு வடிவமாக வரைந்து காட்டும் தளம். பயனாளிகள் வரைவது, இதன் பின்னே உள்ள நரம்பியல் வலைக்கு பயிற்சியாகும்).
8. ஜேப்பியர் – https://zapier.com/ ( பெரும்பாலான ஏஐ சேவைகள் செய்வது வெறும் தானியங்மயமாக்கம் தான். அந்த வகையில் சமூக ஊடக செயல்பாடுகளை பல ஆண்டுகளாக தானியங்கிமயமாக்கும் வர்த்தக சேவை. ஏஐ நுட்பத்தின் மிகை தன்மையை புரிந்து கொண்டு தரைக்கு வர உதவும்).
9. எலிமண்ட்ஸ் ஆப் ஏஐ – https://www.elementsofai.com/ ( ஏஐ நுட்பம் பற்றி ஊடகமும், மற்றவர்களும் பேசுவது இருக்கட்டும். ஏஐ அடிப்படைகளை கொஞ்சம் கற்றுத்தெளியலாம் என வழிகாட்டும் தளம்).
10. இந்தியா.ஏஐ – https://indiaai.gov.in/ ( எஐ செய்திகளை தொகுத்தளிக்கும் இந்திய அரசு தளம்).
-