வலை 3.0 வேலைவாய்ப்பு வழிகாட்டி
ஒரு காலத்தில் பிபிஓ வேலை வாய்ப்புகள் பிரபலமாக இருந்தன. அதற்கு முன் டிடிபி, மெடிகல் டிரான்ஸ்கிப்ஷன் வேலைவாய்ப்புகள் முன்னணியில் இருந்தன. இந்த கதையெல்லாம் எதற்கு என்றால் இப்போது வலை 3.0 வேலைவாய்ப்புகள் தான் கவனத்தை ஈர்க்கத்துவங்கியிருக்கின்றன.
அதென்ன வலை 3.0 என்பதை தனியே விரிவாக பார்க்கலாம். இப்போதைக்கு வலை 3.0 என்றால் பிளாக்செயின் நுட்பம் சார்ந்த தொழில்நுட்பங்கள் தொடர்பானது என்று மட்டும் புரிந்து கொள்ளலாம். மையமில்லா தன்மை இதன் அடிப்படையாக அமைகிறது.
வலை 3.0 வேலைவாய்ப்புகள் தான் எதிர்கால போக்காக இருக்கும் என தாராளமாக நம்பலாம் என்பதால், புரூக்.கோ (https://froog.co/) இணையதளத்தை நீங்கள் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் இந்த தளம் வலை 3.0 வேலைவாய்ப்புகளுக்கான இணைய பலகையாக அமைந்துள்ளது.
வலை 3.0 தொடர்பான வேலைவாய்ப்புகளை அவற்றின் தன்மைக்கேற்ப இந்த தளம் வரிசையாக பட்டியலிடுகிறது. வேலையின் பெயர், பணி நேரம், ஊதியம் உள்ளிட்ட தகவல்கள் ஒவ்வொரு வேலைவாய்ப்பிலும் இடம் பெற்றுள்ளது.
வேலைகளின் வகைகளுக்கு ஏற்ற குறிச்சொற்களாகவும் தனியே வேலைவாய்ப்புகளை அடையாளம் காணலாம்.
இந்த தளத்தின் மற்றொரு தனித்தன்மை, வேலைவாய்ப்புகளில் கிரிப்டோ நாணயங்களை சம்பளமாக பெறும் வேலைகளையும் அடையாளம் காட்டுவது தான்.
-