பத்து வரிகளில் கிரிப்டோ கரென்ஸி அறிமுகம்
கிரிப்டோ நாணயம் பற்றியே ஒரே பேச்சும் விவாதமுமாக இருக்கிறதே, கிரிப்டோ அடிப்படைகளை அறிந்து கொள்ள ஒரு இணையதளம் சொல்லுங்கள் எனும் கேள்வி உங்கள் மனதில் இருந்தால், நியூயார்க் மாநில பல்கலை இணையதளத்தின், கிரிப்டோ கரென்ஸி அடிப்படை அறிமுக பக்கத்தை (https://www.oswego.edu/cts/basics-about-cryptocurrency ) அதற்கான பதிலாக கொள்ளலாம்.
நச்சென நாலு வரியில் பதில் சொல்வது போல, இந்த அறிமுக பக்கம் பத்து வரிகளில் கிரிப்டோ கரென்ஸி அடிப்படை அம்சங்களை பளிச் என விளக்குகிறது:
கிரிப்டோ கரென்ஸிகள் பலவித பெயர்களில் வருகின்றன. இவை மாற்று ஆன்லைன் பணபரிவர்த்தனை வழிகளாக பிரபலமாகி வருகின்றன. இவற்றை பணமாக மாற்றிக்கொள்ள முற்படும் முன் கிரிட்போ கரென்சிகள் என்றால் என்ன, இவற்றின் இடர்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என துவங்கும் இந்த அறிமுகம், கிரிப்டோ பற்றியும் அதன் இடர்கள் பற்றியும் ரத்தினச்சுருக்கமாக ஆனால் மிக்த்தெளிவாக விளக்குகிறது.
கிரிப்டோ கரென்ஸி என்பது, என்கிப்ஷன் அல்கோரிதம் மூலம் உருவாக்கப்படும் ஒரு மாற்று பண பரிவர்த்தனை முறை.
என்கிரிப்ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், இவை நாணயமாகவும், மெய்நிகர் தணிக்கை கணக்கு முறையாகவும் செயல்படுகின்றன.
கிரிப்டோவை பயன்படுத்த உங்களுக்கு கிரிப்டோ வாலெட் எனப்படும் கிர்ப்டோ பர்ஸ் தேவை. இது உங்கள் கம்ப்யூட்டர் அல்லது கிளவுட்டில் இருக்கலாம்.
இவை கிரிபோட்வின் அடிப்படை அம்சங்களில் முக்கியமானவை.
இனி இடர்களை பார்க்கலாம்.
இவை புதியவை மற்றும் இவற்றுக்கான சந்தை மிகவும் ஏற்றம் இறக்கம் கொண்டவை.
இவற்றின் பரிவர்த்தனைக்க்கு வங்கிகள் அல்லது வேறு மூன்றாம் தரப்பு தேவையில்லை என்பதால் இவற்றுக்கு காப்பீடு இல்லை மற்றும் தேவையின் போது பணமாக மாற்றிக்கொள்வது மிகவும் கடினம்.
மேலும் தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதால், தாக்காளர்கள் கைவரிசைக்கு இலக்காகும் தன்மை கொண்டவை.
இவற்றோடு நம்மூரைப்பொருத்தவரை, பணமாக்கும் மோசடி வலையில் எளிதாக சிக்க வைப்பவை என்றும் புரிந்து கொள்ளலாம்.
கிர்ப்டோவை புரிந்து கொள்ள இது மட்டும் போதாது. ஆனால், நல்ல துவக்கமாக இருக்கலாம். மற்ற கிரிப்டோ தளங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
-