அனிமேஷன் செய்திகளை உருவாக்க உதவும் இணையதளம்
ஒரு சின்ன உத்தி தான். ஒருவர் படிக்கும் செய்தி, அப்படியே வாசகமாக தோன்றாமல், ஒவ்வொரு எழுத்தாக, ஒவ்வொரு சொல்லாக மெல்ல திரையில் தோன்றுவது, பார்ப்பதற்கு ஈர்ப்புடையதாக தான் இருக்கும் அல்லவா?
இந்த சிறப்பு விளைவு, அனிமேஷன் உத்தியால் சாத்தியமாகிறது. இத்தகைய உத்தியுடன் ஒரு செய்தி அல்ல கருத்தை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தலாம். பொருத்தமாக கையாண்டால் இது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஆனால், இதற்காக அனிமேஷன் தெரிந்திருக்க வேண்டும் என்றோ, அனிமேஷன் கற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அவசியம் இல்லை. இத்தகைய அனிமேஷன் விளைவை எளிதாக உருவாக்கி கொள்ள வழி செய்கிறது டைப்ரைட்டிங்.இங்க் (https://typewriting.ink/ ) இணையதளம்.
இந்த தளத்தில், எந்த ஒரு வாசகத்தை டைப் செய்தாலும், அதை அனிமேஷன் விளைவுடன் உருவாக்கித்தருகிறது. பின்னர் இந்த இணைப்பை சமூக ஊடகம் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து கொள்ளலாம். அதை படிப்பவர்களுக்கு, செய்தி அனிமேஷன் வடிவில் மெல்லத்தோன்றும்.
அனிமேஷன் விளைவுகளை எப்படி வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான தேர்வுகளும் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாள் வாழ்த்து செய்தி அல்லது பொன்மொழி போன்றவற்றை இவ்வாறு உருவாக்கி பகிரலாம். கவிதை, கதை ஆகியவற்றையும் உருவாக்கி பகிரலாம்.
நீங்கள் விரும்பினால், இந்த செய்தியை தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளலாம். அல்லது இந்த தளத்தில் பொதுவில் பகிரலாம். அந்த வகையில் இந்த தளத்தில் பகிரப்பட்ட ஒரு சுவாரஸ்யமான செய்தி:
https://typewriting.ink/tellio/a-prayer-8884
-
இந்த செய்தியையும் பாருங்கள்; https://typewriting.ink/anonymous/அருமையான-இணையதளம்--02