காலநிலை மாற்றம் வேலைவாய்ப்புகள் இணையதளம்
எந்த துறையில் இப்போது அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது என அறிந்து கொண்டு அதற்கேற்ப வேலை தேடுவது ஒரு வகை என்றால், இப்போது எந்த துறையில் நாம் வேலை பார்க்க வேண்டும் எனும் குறிக்கோளுடன் வேலை தேடுவது இன்னொரு வகையாக இருக்கிறது. முதல் வகை இலக்கில்லாமல், அப்போதைய போக்கின் பின்னே செல்வது என்றால் இரண்டாவது வகை இலட்சிய நோக்கம் சார்ந்தது.
அந்த வகையில் நம் காலத்து நெருக்கடியாக கருதப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை பட்டியலிடுகிறது ’கிளைமட்ஜாப்லிஸ்ட்’ (https://www.climatejobslist.com/ ) இணையதளம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் உதவும் தொழில்நுட்பங்கள் சார்ந்து இயக்கும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை இந்த தளம் அடையாளம் காட்டுகிறது. பொறியியல், மென்பொருள், மனிதவள மேம்பாடு என பல்வேறு பிரிவுகளில் காலநிலை நுட்ப வேலைகளை இதில் காணலாம்.
கால்நிலை மாற்றம் தொடர்பான நுப்டங்களை மையமாக கொண்ட கார்பன் தீஸிஸ் (carbonthesis.com ) செய்தி மடலை நடத்தி வரும் ஜேக்கப் என்பவர் இந்த வேலைவாய்ப்பு இணையதளத்தை நடத்தி வருகிறார்.
வேலைவாய்ப்பு இணையதளங்களில் இத்தகைய குறும் பிரிவு தளங்களே இப்போதைய போக்ககாக இருக்கிறது.