ஆன்லைனில் பியானோ கற்கலாம்.
உங்களுக்கு பியானோ இசைக்கருவி வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருக்கிறதா? எனில் உங்கள் ஆசைக்கு அணை போட வேண்டாம். இணையம் மூலம் பியானோ வாசிக்க கற்றுத்தரும் பியானு (https://pianu.com/ ) இணையதளம் மூலம் முயன்று பாருங்கள்.
எல்லோரும் பியானோ கற்றுக்கொள்ளலாம் என ஊக்குவிக்கும் இந்த தளம், விளையாட்டு போல ஈடுபாட்டுடன் பியானே வாசிக்க கற்கலாம் என்கிறது. இதற்கான எளிய பாடங்களை இந்த தளம் கொண்டிருக்கிறது.
கட்டண சேவை தான் என்றாலும், ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தில் உள்ள ஆன்லைன் பியானோவை வாசித்துப்பார்க்கலாம்.