மொழி விளையாட்டு இணையதளம்!
உலகில் உள்ள மொழிகளில் எத்தனை மொழிகளை உங்களால் கண்டு பிடிக்க முடியும்? அதாவது, குறிப்பிட்ட மொழியின் எழுத்துக்களை பார்த்தால் அல்லது மொழியின் சொற்களை கேட்டால், அதற்குறிய மொழி எது என்பதை அடையாளம் காண முடியுமா?
இந்த கேள்விகளுக்கான பதில் என்னவாக இருந்தாலும், லாங்குவேஜ்ஸ்குவாட் ( https://www.languagesquad.com/) இணையதளத்தை நீங்கள் அறிமுகம் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், உலகின் மொழி வளம் எத்தனை பரந்து விரிந்தது என்பதை உணர்த்துவதோடு, நம் மொழியறிவின் போதாமையையும் இந்த தளம் உணர்த்துகிறது.
அடிப்படையில் இந்த தளம் மிகவும் எளிமையானது. இதில் நீங்கள் மொழி விளையாட்டில் ஈடுபடலாம். இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. முதல் வாய்ப்பில், ஒலி வடிவில் குறிப்பிட்ட மொழியின் சொற்களை கேட்டு அதற்கான மொழியை கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
இரண்டாவது வாய்ப்பில், ஒரு மொழியின் வார்த்தைகளை பார்த்து அந்த மொழியை ஊகிக்க வேண்டும். தேர்வு செய்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதோடு, சரியான மொழி சுட்டிக்காட்டப்படுகிறது. எளிமையான வடிவம் மற்றும் கடினமான வடிவம் ஆகிய வாய்ப்புகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தளத்தின் இன்னொரு சிறப்பம்ச, கேட்கும் மற்றும் பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களும் விளையாடும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.