டிவிட்டர் பக்கத்தில் அடுத்து என்ன குறும்பதிவை பகிர்வது எனும் கேள்வியும், குழப்பமும் இருந்தால், வாட்டூடிவீட் ( https://whattotweet.com/#) இணையதளம் உங்களுக்கான வழிகாட்டியாக அமையும்.
பாட்டெழுத அடியெடுத்துக் கொடுப்பது போல, டிவிட்டரில் குறும்பதிவாக வெளியிடுவதற்கான யோசனையை முன்வைக்கிறது.
நீங்கள் படித்த புத்தகத்தின் விமர்சனத்தை பகிரலாம்…
நீங்கள் செய்த செயலிக்கான விளக்கத்தை பகிரலாம்…
இதம் தரும் செய்தியை பகிரலாம்..
எதையாவது பரிந்துரைக்கலாம்…
இப்படி யோசனைகள் அமைகின்றன.
அடுத்து என்ன குறும்பதிவிடலாம் எனும் கேள்விக்கான பதில் அளிக்கும் பட்டனை அழுத்தும் ஒவ்வொரு முறையும் இத்தகைய யோசனை தோன்றுகிறது.
அதோடு, இந்த யோசனைக்கு செயல்வடிவம் கொடுப்பது போல அமைந்துள்ள குறும்பதிவுகளும் உதாரணம் காட்டப்படுகின்றன.
ஆக, குறும்பதிவுக்கான யோசனையை பெறுவதோடு அதற்கான உதாரணத்தையும் பார்க்கலாம்.
டிவிட்டரில் கணக்கு துவங்கிவிட்டு, அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவு. அதே நேரத்தில் தங்களை டிவிட்டர் புலிகள் என நினைத்துக்கொண்டிருப்பவர்கள் கூட, பயனுள்ள குறும்பதிவுகளை பகிர்வது எப்படி என்பதை இந்த தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
*
எளிமையான ஆனால் பயனுள்ள இந்த சேவையை உருவாக்கியதற்காக @jakobgreenfeld -யை பாராட்டலாம். அப்படியே, @jspector -யையும் மனதார பாராட்டலாம். ஏனெனில், ஜாஷ் ஸ்பெக்டர் , குறும்பதிவு செய்வது தொடர்பாக எழுதிய வழிகாட்டு கட்டுரை தான், இந்த இணையதளத்திற்கு ஊக்கம் அளித்தகாக ஜேகப் குறிப்பிட்டுள்ளார்.
*
சிறந்த முறையில் குறும்பதிவு செய்வதற்கான யோசனைகளை கொண்ட ஸ்பெக்டரின் கட்டுரையை வாசிக்க: https://joshspector.com/what-to-tweet/