கேக் அறிய ஒரு இணையதளம்
இன்று மிக எளிமையான ஒரு இணையதளத்தை பார்க்கலாம். https://isitcake.xyz/ எனும் அந்த தளம், இது கேக் தானா எனும் கேள்விக்கு பதில் அளிக்கிறது.
இந்த இணையதளத்தில், ஒரு புகைப்படத்தை சமர்பித்தால், செய்ற்கை நுண்ணறிவு உதவியுடன் அது கேக் தானா என்பதை கண்டறிந்து சொல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு இணையதளம் எதற்காக என்று நீங்கள் கடுப்பாக கூட கேட்கலாம். இதன் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இணைய நிகழ்வுகளின் உளவியலுடன் பின்னிப்பினைந்த கதை அது.
இந்த கதையை உங்களால் கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள். விளக்கம் நாளை….