அம்மாவுக்காக ஒரு இணையதளம்
இணையம் இப்போது நோட்டிபிகேஷன்களால் ஆகியிருக்கிறது. புதிய தகவல்கள், புதிய செய்திகள் என எதுவாக இருந்தாலும் நம் சமூக ஊடக பக்கங்களில் வந்துவிடுகின்றன. இவை தொடர்பான தகவல்களும் நம் போனில் நோட்டிபிகேஷன்களாக நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.
இப்படி நாம் சமூக ஊடகங்களிலேயே மூழ்கி இருந்தாலும், அம்மாவை அழைத்துப்பேச அல்லது அன்பாக ஒரு நலம் விசாரிப்பை மேற்கொள்ளவோ பெரும்பாலானோர் மறந்து விடுகிறோம். இதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது, ’ ரிமம்பர் டு டெக்ஸ்ட் யுவர் மாம்’ (https://remembertotextyourmom.com/ ) இணையதளம்.
உங்கள் அம்மாவுக்கு மறக்காமல் செய்தி அனுப்ப இந்த தளம் நினைவூட்டுகிறது. இந்த தளத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், நீங்கள் தேர்வு செய்யும் கால இடைவெளியில் அம்மாவுக்கு செய்தி அனுப்ப நினைவூட்டுகிறது. அதற்கேற்ப நீங்களும் அம்மாவுக்கு மறக்காமல் செய்து அனுப்பிலாம்.
இப்போதைக்கு அமெரிக்காவில் உள்ள தொலைபேசி எண்களுடன் மட்டுமே இந்த தளம் செயல்படுகிறது. எனினும், இதன் நோக்கமும் அழகாகவும், அன்பாகவும் இருக்கிறது அல்லவா? அதற்காக தான் இந்த அறிமுகம்.