இன்று புதிதாக கற்றுக்கொள்ள ஒரு இணைய சமூகம்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டில் புதிய தகவலோடு துவங்குவோம். தினம் தினம் உங்களை கற்றுக்கொள்ள வைக்கும் தளம் தொடர்பான தகவல். ’இன்று நான் கற்றுக்கொண்டது’ (https://www.reddit.com/r/todayilearned/ ) என சொல்ல வைக்கும் இந்த தளம், புகழ்பெற்ற இணைய சமூகமான ரெட்டிட் தளத்தின் துணை சமூகமாக இருக்கிறது.
ரெட்டிட் சமூகம், குழுக்கள் மற்றும் துணை குழுக்களால் ஆனது. அந்த வகையில், புதிதாக கற்றுக்கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கான சமூகமாக டுடே ஐ லேர்ண்ட் ( டு.ஐ.எல்) விளங்குகிறது.
ரெட்டிட் கலாச்சாரப்படி, இந்த குழுவில் பயனாளிகள் தாங்கள் கற்றுக்கொண்ட தகவலை இன்று நான் கற்றது (til ) என பகிர்கின்றனர். இதற்கான தகவலை குறிப்பிட்டு, மேலும் விவரங்கள் அறிவதற்காக இணைய இணைப்பையும் வழங்குகின்றனர்.
இந்த இணைப்புகள் வாயிலாக புதுப்புது தகவல்களை தெரிந்து கொள்ளலாம். விரும்பினால் நீங்களும் உறுப்பினராகி புதிய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
ரெட்டிட் போன்ற இணைய சமூகங்களின் பலம், பயனாளிகள் பின்னூட்டங்கள் வாயிலாக நிகழ்த்தும் உரையாடலில் தான் இருக்கிறது. இந்த தளத்திலும், தினம் பகிரப்படும் புதிய தகவல்களோடு பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் கூடுதல் தகவல்களையும் புரிதல்களையும் வழங்குவதாக அமைகின்றன.
-
மோனோலிசா தெரியும்? ஆண் மோனாலிசா தெரியுமா? என கேட்க வைக்கும் அளவுக்கு மிக சுவாரஸ்யமான தகவல் பகிர்வு இந்த தளத்தில் எதிர்பார்க்க கூடிய தகவல்களுக்கான ஒரு உதாரணம்: https://www.reddit.com/r/todayilearned/comments/rsu6uc/til_salvator_mundi_aka_the_male_mona_lisa_was/
லியானார்டோ டாவின்ஸி தளத்தில் இருந்து இந்த தகவல் பகிரப்பட்டிருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.
-
இந்த ஆண்டு உங்கள் புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்றாக ரெட்டிட் தளத்தை அதிகம் பயன்படுத்துவதாக இருக்கட்டும். ரெட்டிட் தளத்தின் சர்வதேச பதிப்பு தவிர, இந்திய மற்றும் தமிழ் பதிப்புகளும் இருக்கின்றன. - https://www.reddit.com/r/tamil/
-
இந்த ஆண்டு கற்றலுக்கான ஆண்டாக அமைய வேண்டும் என விரும்புகிறீர்களா? புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள உதவும் பயனுள்ள இணையதளங்களை இந்த மீடியம் பதிவு பட்டியலிடுகிறது:
இந்த பட்டியலில் என்னை கவர்ந்த தளம், ஐந்து நிமிட ஆடியோ வகுப்புகள் வாயிலாக கற்றுக்கொள்ள வழி செய்யும் லிஸினபில் (https://listenable.io/ ) செயலி. (ஐபோனுக்கானது )
-
இந்த பட்டியலில் உள்ள மற்றொரு பயனுள்ள செயலி, ஸ்மார்ட்போன் பயனாளிகள் கவனச்சிதறலை குறைத்து கவனத்தை குறைத்துக்கொள்ள வழி செய்யும் பாரஸ்ட் செயலி (https://www.forestapp.cc/ ) . இந்த செயலி சுற்றுச்சூழல் நோக்கிலானது என்பது கூடுதல் சிறப்பு.
-
கற்றல் என வரும் போது, இந்த ஆண்டு காலநிலை மாற்றம் பற்றி மேலும் அறிந்து விழிப்புணர்வு பெறுவோம். கால நிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தளம்:
https://coveringclimatenow.org/
இந்த ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான இணையதளங்களை தனியே பதிவிடுவது என்பது எனது தீர்மானம். வாசித்து ஆதரவு தாரீர்.