கிளப்ஹவுஸுக்கு போட்டியாக ஒரு இணையதளம் !
கிளப்ஹவுஸ் பிடித்திருக்கிறது, ஆனால் மிகவும் நெரிசல் மிக்கதாக இருக்கிறது என நினைப்பவர்கள், நோட்-பைட்ஸ் (https://www.note-bytes.com/) இணைய சேவையை பயன்படுத்தி பார்க்கலாம். இந்த தளத்தின் மூலம் மிக எளிதாக ஆடியோ பதிவுகளை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதற்காக நாம் ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, இந்த சேவையை குறிப்பேடு போல பயன்படுத்தி நம் மனதில் தோன்றும் எண்ணங்களை குறித்து வைக்கலாம்.
அதன் பிறகு இந்த தளமே ஏ.ஐ நுட்பத்தின் மூலம் இந்த குறிப்புகளை பாட்காஸ்டிங் சேவை மூலம், கேட்க கூடிய ஆடியோ கோப்பாக மாற்றித்தருகிறது. இந்த கோப்புகளை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்புகளை நாமும் ஒலி வடிவில் கேட்கலாம்.
ஆக, இந்த தளம் இணைய குறிப்பேடாகவும் இருக்கிறது. நம் குறிப்புகளை ஒலி வடிவில் மாற்றி பகிர்ந்து கொள்ளவும் வழி செய்கிறது.