பாட்மிண்டன் புள்ளி விவரங்களுக்கான இணையதளம்
இன்றைய இணையதளத்தை பார்ப்பதற்கு முன், உங்கள் பார்வைக்கு சில இணைய முகவரிகள்:
https://www.fieggen.com/shoelace/knots.htm
http://www.nativewayonline.com/headpr~1.htm
http://www.electricstuff.co.uk/
http://rinkworks.com/stupid/cs_floppies.shtml
https://www.beerstein.net/
இந்த இணைய தளங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? இந்த தளங்களுடன் தொடர்புடைய இணையதளம் எதுவாக இருக்கும் என உங்களால் ஊகிக்க முடிகிறதா? இந்த கேள்விகளுக்கான பதிலை நாளை பார்ப்போம். இப்போது பாட்மிண்டன் தளத்தை பார்க்கலாம்,…
விளையாட்டு ரசிகர்களை பொருத்தவரை போட்டிகளை பார்த்து ரசிப்பதில் இருக்கும் அதே ஆர்வம், போட்டிகள் தொடர்பாக பேசி மகிழ்வதிலும் இருக்கும். இந்த உரையாடல்களை இன்னும் சுவாரஸ்யமாக்குவது புள்ளி விவரங்கள் தான். சாதனைகள், வெற்றிகள் என எண்கள் உயிரோட்டமாக உலா வருவதை புள்ளி விவரங்களில் பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரை புள்ளி விவரங்களுக்கும் பஞ்சம் இல்லை. அவற்றை தெரிந்து கொள்ளும் வழிகளுக்கும் குறைவில்லை. கிரிக்இன்போ தளத்தை கிரிக்கெட் புள்ளி விவரங்களுக்கான சொர்கம் எனலாம்.
கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளிலும் புள்ளி விவரங்களுக்கு குறைவில்லை தான். ஆனால், இந்த விஷயத்தில் பாட்மிண்டன் ரசிகர்களுக்கு மனக்குறை தான்.
பாட்மிண்டன் விளையாட்டில், புள்ளி விவரங்களில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அவற்றை தெரிந்து கொள்வதற்கான வழி தான் இல்லை. கிரிக்இன்போ போன்ற ஒரு மைய இணையதளம் பாட்மிண்டன் விளையாட்டிற்கு இருப்பதாக தெரியவில்லை.
இந்த குறையை போக்கும் வகையில், பாட்மிண்டன் ஸ்டாடிஸ்டிக்ஸ்.நெட் (https://www.badmintonstatistics.net/Index) இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. பாட்மிண்டம்ன் விளையாட்டு தொடர்பான புள்ளி விவர பதிவு பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கிறிஸ்டென்சன் எனும் மென்பொருளாலர் இந்த தளத்தை அமைத்துள்ளார். இதே பெயரில் அமைத்த டிவிட்டர் பக்கத்தை (https://twitter.com/BadmintonStats ) தொடர்ந்து இந்த தளத்தை அமைத்துள்ளார்.
https://badmintonstats.com/ என்ற பெயரிலும் ஒரு இணையதளம் இருக்கிறது. அடிப்படையில் வலைப்பதிவு போலவே இருக்கும் இந்த தளம் பாட்மிண்டன் ரசிகர்களை எந்த அளவு உற்சாகத்தில் ஆழ்த்தும் எனத்தெரியவில்லை.
-