புதிர் போட உதவும் இணையதளம்!
சிலருக்கு எதையுமே சுவாரஸ்யமான முறையில் சொல்வதற்கு பிடிக்கும். இன்னும் சிலருக்கு எதையும் புதிர் போட்டு விடுவிப்பது போல பேசுவது பிடிக்கலாம். இதே போல, இணைய முகவரிகளை புதிரோடு பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது கியூ-லிங்க் இணையதளம் (https://q-link.minung.dev/link/complete ).
இணைய முகவரிகளை சுருக்கமான வடிவில் பகிர்ந்து கொள்ள பல இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அந்த வகையில், கியூ- லிங்க் இணையதளமும், இணைய முகவரிகளை கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.
இந்த தளத்தின் மூலம் இணைய முகவரிகளுக்கான இணைப்பை உருவாக்கி கொண்டால், அதற்கு சுவாரஸ்யமான பூட்டு போட்டுத்தருவது போல ஒரு புதிரை உருவாக்கித்தருகிறது. இணைப்பை பெறுபவர் அந்த புதிரை விடுவித்தால் தான் இணைப்பை பார்க்க முடியும்.
இணைப்பை உருவாக்கும் போதும், ஒரு புதிரை விடுவிக்க வேண்டும். எளிமையான தளம் தான். ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமான எண்ணத்துடன் ஈர்க்கிறது.